கூற
கூறி அவர் சிவனார்
இடம் கொண்ட அன்பின் திறத்தையும், கலிக்காமர், அவர்தம் குடிப்பெயராகிய எயர்கோன்
என்ற அடைமொழியையும், திருமூலர் நம்பிரான் என்ற அடையால் அவர் தலைவர் என்ற
குறிப்பினையும், தண்டியடிகள் நாட்டமிகு என்ற தொடரால் அவர் வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ச்சினையும்
சோமாசிமாறர் தாம் பிறந்த பதியாகிய ‘அம்பரான்’ என்ற அடையினையும் சாக்கியரைக்
குறிக்கும் போது உமைபங்கள் கழலே மறவாது கல்லெறிந்த என்ற அடைகொடுத்து அவரது வரலாற்று
நிகழ்ச்சியினையும் சிறப்புலியார்க்குப் புகழ்வள்ளல் என்றும் கூறி, அவர்தம் புகழையும்
வள்ளன்மையினையும், சிறுத்தொண்டர் திருச்செங்கட்டங் குடியினர் என ஊரினையும், கழறிற்றறிவர்தாம்
கொடைச்சிறப்பை, கார்கொண்டர்கொடை என்னும் அடைபினையும், கணநாதர் ஊர்ப்பெயரைச்
சார்த்திக் கடல் காழிக் கணநாதர் என்பதையும் கூற்றுவ நாயனார் களந்தைகோன்
வேல் கூற்றன் என்று அவர்தம் ஊர், படை இவற்றின் சிறப்பையும் புகழ்ச்சோழர்,
கருவூர்துஞ்சிய அடையால் அவர் இறந்த ஊரையும், நரசிங்க முனை அரையர் என்றதாலும் மெய்யடியார்
என்றதாலும் உண்மையடியார் அரசமரபினர் என்பதையும். அதிபத்தர் நாகை என்று சிறப்பித்ததனால்
நாகபட்டினத்தார் என்பதையும், கலிக்கம்பர் கைதடிந்த என்ற அடை கொடுத்துப் பேசப்படுதலின்,
அவர்தம் வரலாற்றுக் குறிப்பையும் (கலிய நாயனார் எந்த விதமான அடைமொழியும் இன்றிக்
குறிப்பிடப்பட்டவர்) சத்தி நாயனார் கழல் என்னும் அடைமொழியும் விரிஞ்சிகோன் என்னும்
அடைமொழியும் கொடுக்கப்பட்டு அவர் தலைவர் என்ற குறிப்பையும், விரிஞ்சைப் பதியினர் என்ற
குறிப்பையும், ஐயடிகள் காடவர்கோன் என்ற பெயரால் பல்லவர் என்பதையும், கணம்புல்லர்,
நம்பி என்றும் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த என்ற அடைகளால், சிறந்தவர் என்பதையும்
இறைவன் திருவடியே தமக்குக் காவலாகக்கொண்டவர் என்பதையும் கணம்புற்களை விற்றுவந்தவர் என்ற
குறிப்பினையும், நெடுமாறர்
|