பக்கம் எண் :

 

           பாயிரம்

11

திரு பிள்ளை அவர்களின் பிள்ளைத் தமிழ் நூல்களில் இம் முறையினைக் காணலாம்.

    நல்மாணாக்கர்கட்குக் குரு மிகமிக இன்றியமையாதவர்.  குரு என்னும் சொல்லுக்கு இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஒளியாகிய மெய்ஞானத்தை அருளவல்லவன் என்பது பொருள்.  இறைவனைக் காட்டுபவன் குரு ஆவான்  ”உள்ளத்திருந்தும் ஒளித்தர்ன்  பரன், அக்கள்ளந்தனைத் தவிர்த்துக் காட்டினான் குரவன் “  என்பது ஆன்றோர் வாக்கு.  மணிமொழியாரும் குருவைத் தேடினார் என்பது  “  சற்குரு உளனோ என்று நாடுவார் “  எனக் கடவுள் மாமுனிவர் கழறுதல் காண்க.  ஆகவேதான், திரு பி்ள்ளை அவர்கள் ஈண்டுக் குரு வணக்கம் கூறினார்.

    அவை அடக்கம் கூறிக் கொள்ளுதல் தமிழ் நாட்டின் தொன்று தொட்ட வழக்கம் ஆகும்.  கற்றறிந்த பெருமக்கள் கூடியிருக்கும் அவையில் அடங்கிப் பேசுதல் அவை அடக்கமாகும்.  ஆனால், அவை அடக்கம் என்னும் தொடர், அவைக்குத் தாம் அடங்குதல் என்னும் பொருளுடன், அவையைத் தம் திறனால் அடக்குதல் என்னும் பொருள் தருதலையும் ஈண்டு உணர்தல் வேண்டும்.  இங்ஙனம் இரு பொருள்களும் ஒன்று சேர அவை அடக்கம் செப்பிய பெருமை நந்தம் மெய்கண்டார் திருவாக்கால் நன்கு தெளியலாம்.  அப்பாடல்

    தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
    எம்மை உடமை எமைஇகழார்-தம்மை
    உணரார் உணரார் உடங்கியைந்து தம்மில்
    புணராமை கேளாம் புறன்

என்பது.

    இறைவன் வீற்றிருக்கும் இடம் கயிலாயம்.  இது நொடித்தான் மலை என்று கூறப்படும்.  இதன் சிறப்பை  “ ஊழி தோறூழி முற்றும் உயர் பொன்நொடித்தான் மலை “  எனச் சுந்தரர் சொல்லியுள்ளார்.  இக்கருத்தை நன்கு விளக்கும் பாடலாகிய,