New Page 1
சோமாசிமாறர்:
திருவம்பர் வேதியர். ஐந்தெழுத்து ஓதுபவர். சுந்தரரைத் தம் துணையாகப் பெற்றவர். நித்யநியமனம்
பூண்டவர்.
சாக்கியர்:
சங்கை மங்கையினர்.
ஏகாம்பரநாதர் திருமேனியில் செங்கல் எறிந்தவர். இறை திருவருள் பெற்றவர்.
சிறப்புலியார்:
திருவாக்கூரினர்;
அந்தணர். சிவனடியார்க்குச் சிறப்புச் செய்தவர்.
சிறுத்தொண்டர்:
இவர் திருச்செங்காட்டங்
குடியவர் மன்னவர். தம் ஒரு மகனை அரிந்து இறைவர்க்குப் படைத்தவர்.
கழறிற்று அறிவார்:
உழ மண்
உலறிய மேனியனாய் வந்த வண்ணானைச் சிவனடியான் என வணங்கியவர். சேர மரபினர். சிவனார்
அளித்த வெள்ளை யானையில் சுந்தரர் சென்றபோது, அவர்க்கு முன்னாக இவர் குதிரைமீது சென்றவர்.
கணநாதர்
காழி நகரினர்.
சிவனடியார்களாகப் பலரை ஆக்கியவர். அடியார்கட்குத் தொண்டு செய்யும்படி உபதேசித்தவர்.
சிவகணங்கட்குத் தலைமை வகித்தவர்.
கூற்றுவ நாயனார்
களந்தைப்
பதியினர். இறைவன் திருவடிகளையே முடியாகக் கொண்டு உலகை ஆண்டவர்.
பொய்யடிமை இல்லாத
புலவர்:
தமிழ்ச் சங்கத்தில் இருந்த கபில பரணர், நக்கீரர் முதலான நாற்பத்தொன்பதின்மர்கள்.
சிவபெருமான் திருவடியே பாடும் புலவர்கள்.
புகழ்ச் சோழர்
சிங்கள நாட்டைப்
பொடிபடுத்தியவர். சூரிய குலத்தவர். எறிபத்தர்க்குத் தம் வாளை ஈந்தவர்.
நரசிங்க முனையரையர்
தவர்க்குப்
பொன் அளித்தவர். புலவர்களும் காமுகர் வடிவில் வந்தவர்க்கும் இரட்டிப்பான பொன் ஈந்தவர்.
மன்னர் மரபினர்.
|