பக்கம் எண் :

New Page 1

114

             காப்புப் பருவம்

    முனையடுவார்: திருநீடூர்த் தலைவர், போர் முனையில் நின்று போரிடுபவர்.  தோற்றவர்களோடு தாம் சேர்ந்து வெற்றி கண்டு அவர் தரும் கூலி கொண்டு அப்பொருளைச் சிவனடியார்கட்கு ஈந்தவர்.

    கழற்சிங்கர்: திருவாரூர்த் தியாகர்க்கு வைத்த மலரைத் தம் மனைவி கையால் எடுத்து மோந்ததனால் அவர் கையை அரிந்தவர்.

    இடங்கழியார்: சிதம்பரச் சிற்றம்பல முகட்டினுக்குப் பொன் வேய்ந்த ஆதித்த சோழன் மரபினர்.  இருக்கு வேளூரினர்.  தம் செல்வம் சிவனடியார்கட்கு உரியது எனப்பறை அறைந்து அறிவித்தவர்.

    செருத்துணையார்: கழற்சிங்கர் தேவியார் தியாகர்க்கு என வைத்த மலரை மோந்த காரணத்தால் மூக்கை அரிந்தவர்.  தஞ்சை ஊரினர்.

    புகழ்த்துணையார்: திருப்பத்தூரினர்.  வறுமையால் வாட்டம் உற்றவர்.  ஒருநாள் இறைவர் திருவடிமேல் முழுக்குநீரைக் கொட்டும்போது தளர்ச்சியினால் கலசத்தை முடியில் போட்டு நடுங்க,  இறைவர் திருவருளால் நிதி பெற்றவர்.

    கோட்புலியார்: திருநாட்டியத்தான் குடியினர் தலைவர்.  திருநாவலூரர் அருள் பெற்றவர்.  தம் சுற்றத்தாரை வெட்டி வீழ்த்தியவர்.

    பத்தராய்ப்பணிவார்: திருவாரூர்பிரான் திருவடிபணிந்தவர்.  மயிர்சிலிர்க்க ஆனந்த நீர்பொழிய உடல் நடுங்க, வாய்குழறப் பக்திபூண்டு வணங்குபவர்.

    பரமனையே பாடுவார்: வடமொழி தென்மொழிகளால் தில்லைப்பரமனைப்பாடுவார்.

    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்: இறைவன் திருவடிகளில் சித்தம் வைத்தவர்.  இவர்கள் வீடு பேறு எய்தியவர்.