பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

117

யதையும், மண்ணியாற்றங்கரையில் மணலால் இலிங்கம் அமைத்துப் பால் முழுக்கு ஆட்டியதையும், சண்டீசன் என்னும் பதவி பெற்றதையும், இறைவர் அவர்க்கு மாலை சூட்டியதையும் சம்பந்தரது மூன்று திருமுறைகளின் மூலம் உணர்கிறோம்.

    பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை
    வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான்
                                    தனக்கு
    தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே

என்றும்,

    தோத்திரமா மணலிலிங்கம் தொடங்கியஆன்
                                நிரையின்பால்
    பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி

என்றும்,

    எண்திசையார் மகிழஎழில் மாலையும்போ னகமும்
                                    பண்டு
    சண்டி தொழ அளித்தான்

என்றும்,

        வந்தமண லாலிலிங்கம்
            மண்ணியின்கண் பாலாட்டும்
        சிந்தைசெய்வோன் தன்கருமம்
            தேர்ந்துசிதைப் பான்வருமத்
        தந்தைதனைச் சாடுதலும்
            சண்டீசன் என்றருளிக்
        கொந்தணவும் மலர்கொடுத்தான்
            கோளிலிஎம் பெருமானே.

என்றும் வருதல் காண்க.

    கண்ணப்பரைப்பற்றிக் கழறுகையில்,

    கானலைக்கும் அவன்கண் இடந்தப்பநீள்
    வானலைக்குந் தேவு வைத்தான்

என்றும்,