என
என்று பாடி, அவர் பாண்டியன்
மந்திரி என்பதையும், அடியார் அடியிசை வணங்கும் இயல்பினர் என்பதையும் ஐந்தெழுத்து ஓதுபவர் என்பதையும்
அறிவித்துள்ளனர்.
திருநீலகண்டயாழ்ப்பாணரைக்
குறிக்கையில் “தக்க பூமனை சுற்றக்கருளொடே, தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே” என்று அவர் தம்மை
அழைத்ததையும், அவர்க்கு இறைவர் பொற்பலகை ஈந்ததையும் அறிவித்துள்ளனர்.
தண்டி அடிகளைப்பற்றிச்
சம்பந்தர் தேவாரத்தால் நாம் பெரிதும் அறிதற்கில்லை. “அண்டர் தொழும் தண்டி” என்ற அளவில்
மட்டும் அறிகிறோம்.
புகழ்த்துணை நாயனார்க்கு
இறைவர் தினம் பொற்காசு அளித்த குறிப்பினைச் சம்பந்தர்,
அலந்த அடியான்
அற்றைக் கன்றோர்காசு எய்திய
புலர்ந்த காலை
மாலை போற்றும் புத்தூரே
என்று பாடியுள்ளார்.
அப்பர் தேவாரத்தின்
மூலம் ஒரு சில அடியார்களைப் பற்றிக் கீழ்வரும் குறிப்புக்களை அறிகிறோம். அவரால் குறிப்பிடப்பட்டவர்கள்
ஒன்பது பேர்கள். அவர்கள் ஆவார் கீழ் குறிப்பிடப்படுவர்கள்.
திருஞானசம்பந்தர்க்கு
இறைவர் ஆயிரம்பொன் கொடுத்ததையும், இவர் திருமறைக் காட்டுக்கதவினை அடைக்கப்பாடியதையும்,
முறையே “கழுமல ஊரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே” என்றும், “திறக்கப்பாடியஎன்னினும்
செந்தமிழ் உறைப்பப் பாடி அடைப்பித்தார்” என்றும் பாடி அறிவித்துள்ளார்.
அமர்நீதியாரை
இறைவர் திருநல்லூரில் கோவணம் காரணமாக அவர்தம் மனைவியாருடன் ஆட்கொண்டார் என்பதை,
|