ந
நாட்கொண்ட தாமரைப்பூந்
தடம்சூழ்ந்த
நல்லூர் அகத்தே
கீட்கொண்ட கோவணம்
காஎன்று
சொல்லிக்
கிறிபடத்தான்
வாட்கொண்ட
வார்த்தை உரைக்கும்
அன்றோ இவ்வகல்
இடமே
என்று பாடியுள்ளனர்.
கண்ணப்பர்
வேடர் என்பதையும், வாயில் நீர் கொணர்ந்து இறைவன் தலையில் கொட்டித் தமது செருப்புக்
காலால் முடிமாலைகளை நீக்கி இறைச்சி படைத்து, இறைவர் கண்களில் குருதிவருதல் கண்டு தம் கண்களை
அப்பினர் என்பதையும்,
குவப்பெருந் தடக்கை
வேடன்
கொடுஞ்சிலை இறைச்சி பாரம்
துவர்ப்பெருஞ்
செருப்பால் நீக்கித்
தூயவாய் கலசம்
ஆட்ட
உவப்பெரும் குருதி
சோர
ஒருகணை இடந்தங்
கப்பத்
தவப்பெருந் தேவு
செய்தார்
சாய்க்காடு மேவி
னாரே
என்று பாடிக்காட்டி
யுள்ளனர்.
சண்டேசுரர்
வரலாற்றுக் குறிப்பைப் பாடும்போது,
ஆமலி பாலும் நெய்யும்
ஆட்டியர்ச்
சனைகள் செய்து
பூமலி கொன்றை
சூட்டப்
பொறாததன் தாதை
தாளைக்
கூர்மழு ஒன்றால்
ஒச்சக்
குளிர்சடைக்
கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக்
கீந்தார்
சாய்க்காடு மேவி
னாரே
என்றும்,
|