த
தழைத்ததோர் ஆத்தி
யின்கீழ்த்
தாபரம் மணலால்
கூப்பி
அழைத்தங்கே ஆவின்
பாலைக்
கறந்துகொண்
டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை
தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர்
அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட
னாரே
என்றும்,
நிறைந்தமா
மணலைக் கூப்பி
நேசமோ டாவின்
பாலைக்
கறந்துகொண் டாட்டக்
கண்டு
கறுத்ததன் தாதை
தாளை
எறிந்தமா ணிக்கப்
போதே
எழில்கொள்சண்
டீசன் என்னச்
சிறந்தபேர் அளித்தார்
சேறைச்
செந்நெறிச்
செல்வ னாரே
என்றும்பாடி, அவர் ஆத்திமர
நீழலில் மணலால் இலிங்கம் அமைத்து, ஆவின்பால் முழுக்குச் செய்து, மலர் இட்டு, வழிபட்ட நிலையில்
தம் பூசைக்கு இடையூறு செய்த தம் தந்தையார் தாளை மழுவால் வெட்ட இறைவர் அவர்க்குக் கொன்றை
மாலை சூட்டிச் சண்டீசர் என்னும் சிறப்பையும் தந்தார் என்ற வரலாற்றை அறிவித்தனர்.
அப்பூதி அடிகளார்
நாட்டில்
வறுமை ஒழிய யாகம் செய்தவர், இறைவர் திருவடியில் தம் தலைபொருந்த வணங்குபவர் என்பனவற்றை,
“அஞ்சிப்போய்க் கலிமெலிய அழல்ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய்நின்ற
சேவடியாய்”
என்றுபாடி யுள்ளார்.
நமிநந்தி அடிகள்ளைப்
பற்றிக் குறிப்பிடும்போது,
|