பக்கம் எண் :

ஆரூர

 

       காப்புப் பருவம்

123

    ஆரூர் நறுமலர் நாதன் அடித் தொண்டன்
                                        நமிநந்தி
    நீரால் விளக்கிட்டமை நீள்நா டறியும் அன்றே

என்றுபாடி, அவர் திருவாரூர் மூர்த்திக்கு நீரால் விளக்கெரித்தார் என்பதை அறிவித்தனர்,

    சாக்கியனார் இறைவனைக் கல்லெறிந்து வழிபட்டுப் பின் கஞ்சி உண்பார் என்றும், அக்கல்லை மலராக இறைவன் ஏற்றான் என்றும் கூற வந்த இடத்து,

    “கல்லினால் எறிந்து கஞ்சிதாம் உண்ணும்
                                    சாக்கியனார்”

என்றும்,

    புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்கள் ஆக்கி
                                            னான் காண்

என்றும் பாடிக் காட்டினார்.

    கணம்புல்லரை வெறும் பெயரால் மட்டும் குறிப்பிட்டுப் போந்தார்.  “கணம் புல்லன் கருத்துகந்தார்” “கணம்புல்லர்க்கருள் செய்து” என்ற அடிகளைக் காண்க.

    கோச்செங்கட் சோழர் சிலந்தியாக இருந்தபோது திருவானைக்கா இறைவர்க்குத் தம் வாய் நூலால் பந்தர் இட்டார் என்றும்,  அதனால் சோழர் மரபில் பிறக்கச் செய்து அரசாள வைத்தார் என்றும் குறிப்பிடும் முறையில்,

    சிலந்தியும் ஆனைக் காவி்ல் திருநிழல் பந்தர் செய்து
    உலந்தவண் இறந்தபோதே கோச்செங் கணானும் ஆகக்
    கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
    குலந்தனில் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே

என்று பாடிக் காட்டினார்.

    சுந்தரர் தம் திருவாக்கில் நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்களைத் திருதொண்டத்  தொகைவழி காண்கின்றோம்.  அத்துடன் இன்றி, அவர் தம் ஏனைய பதிகங்களில் சில நாயன்