பக்கம் எண் :

124

             காப்புப் பருவம்

மார்களைப் பற்றிய குறிப்புக்களையும் காண்கிறோம்.  அங்ஙனம் குறிப்பிடப்பட்டவர் பின் வருபவர்கள்.

    திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுகையில் இவர் தமிழ் வல்லவர்,  நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியவர், சீர்காழியில் சிறந்து விளங்கியவர், இறைவர் தாளம் ஈயப்பெற்றவர் என்ற குறிப்புக்களை “நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்”என்றும் ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து’ என்றும் பாடி அறிவித்துள்ளனர்.

    திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தொகை இவ்வளவு என்பதை “இணைகொள் ஏழ் எழுநூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவுக்கரையன்” என்று பாடிப் பரவியுள்ளனர்.

    சண்டேசுவரர் “அணிகொள் ஆடை அம்பூண் அணிமாலை அமுது செய்து அமுதம் பெறும் சண்டி” என்ற அளவில் இவரைப்பற்றி அறிவித்துள்ளார்.  எறிந்த சண்டி என்ற தொடரில் தாதைதாளை வெட்டிய குறிப்புளது.

    தண்டிஅடிகள் “தண்டுடைத் தண்டி” என்று மட்டும் இவரைக் குறித்துள்ளார்.  இவர் குருடராய் இருந்தமையின் கோலையும் உடன் கூறினர்போலும்.

    புகழ்த்துணையாரது வரலாறு பெரிதும் அறியும் முறையில்,

    அகத்தடிமை செய்யும்அந் தணன்தான் அரிசில்
        புனல்கொண் டுவந்துஆட் டுகின்றான்
    மிகத்தளர் வெய்திக் குடத்தை யும்நும் முடிமேல்
        விழுந்திட் டுநடுங் குதலும்
    வகுத்தவனுக்கு நித்தல் படியும்வரும் என்றொரு
        காசினை நின்ற நன்றிப்
    புகழ்த்துணைகை புகச்செய் துகந்தீர் பொழிலார்
        திருப்புத்தூர்ப் புனிதன் நீரே

என்று பாடியுள்ளார்.