பக்கம் எண் :

பத

126

             காப்புப் பருவம்

பதிகங்களின் மூலமும், எட்டாம் திருமுறை, ஒன்பதாம் திருமுறை, பதினோராம்திரு முறைகள் மூலம் சேக்கிழார் அறிந்துள்ளவையும் இவ்வளவே.

    ஆனால் சேக்கிழார் திருமுறைகளின் மூலம் நாயன்மார்களைப் பற்றி மேலும் அறியமுடியா நிலையில் உள்ள பல குறிப்புக்களை நன்கு எடுத்து மொழிந்துள்ளார்.  இதுகுறித்தே இவர், “ முன் விரித்து எலாம் அறியவலர் “  என்று ஈண்டு எடுத்து மொழியப்பட்டனர்.  இனி, எலாம் அறியவலர் என்பதற்குச் சான்றுகள் தருவோமாக : 

    இயற்பகையாரது சாதியைப் பற்றிச் சுந்தரர், நம்பியாண்டார் பாடல்களில் காணக்கிடைக்கவில்லை.  ஆனால், சேக்கிழார், அவர் வணிகர் என்பதை “அக்குலப்பதியில் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து அமைந்தார் “  என்று அறிவிக்கிறார்.  அப்பர்பெருமான் கயிலை காணவேண்டு என்னும் குறியில் அழுந்தி நின்றார் என்பதை “ ஆளும் நாயகர் கயிலையில் இருக்கை கண்டலால் மாளும் இல்வுடல் கொண்டு மீளேன் “  என கூறி வழியில் தடுத்தவர் வாக்கினை மறுத்தார் சேக்கிழார் என்று பாடியுள்ளார்.  இக்குறிப்பு இவர் தரும் குறிப்பே ஆகும்.  சிறுத்தொண்டர் குணம் எத்தன்மைத்து என்ற குறிப்பு முன்னூற்களில் அறிதற்கு இல்லை.  ஆனால்  சேக்கிழார்,

            சீதமதி அரவினுடன்
                செஞ்சடைமேல் செறிவித்த
            நாதனடி யார்தம்மை
                நயப்பாட்டு வழிபாட்டால்
            மேதகையார் அவர்முன்பு
                மிகச்சிறியவ ராய்அடைந்தார்
            ஆதலினால் சிறுத்தொண்டர்
                எனநிகழ்ந்தார் அவனியின்மேல்

என்று அறிவித்துள்ளார்.

    திருக்குறிப்புத் தொண்டர் வண்ணார மரபினர் என்பது தெரியவருகின்றது.  ஆனால், அம்மரபினர் செய்கை இன்னது