பக்கம் எண் :

என

 

       காப்புப் பருவம்

127

என்பதை அறிந்து செப்பிய பெருமை சேக்கிழார்க்கே சிறப்புடையதாகும்.  இதனை “வெறித்தட நீர்த்துறையின் கண்மா செறிந்து மிகப் புழுக்கி “ என்று அறிவித்திருப்பதிலிருந்து அறியவும்.

    திருநாவுக்கரசர் குடி குறுக்கையர் குடி என்பதைச் சுந்தரரோ, நம்பியாண்டாரோ நவின்றிலர்.  ஆனால் சேக்கிழார்,

    விலக்கின்மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண்
    குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர்தம்
                                குடிவிளங்கும்

என்று அறியச் செய்துள்ளார்.

    நாயன்மார்கள் எப்படி வாழ்க்கை நடத்தினர் என்பதை நன்கு அறிவித்துச் சென்றுளார் சேக்கிழார்.  காரி நாயனார் எங்ஙனம் வாழ்க்கை நடத்தினர் என்பதை,

        குறையாத தமிழ்க்கோவை
            தம்பெயரால் குலவும்வகை
        முறையாலே தொகுத்தமைத்து
            மூவேந்தர் பால்பயில்வார்

என்று குறித்துப் போந்தார்.  ஈண்டுப் பயில்வார் என்பது, செல்வார் என்னும் பொருளது.  பொருள் விரித்துப் பொருள் பெறுவாராம்.

        ஆங்கவர்தாம் மகிழும்வகை
            அடுத்தஉரை நயமாக்கிக்
        கொங்கலர்தார் மன்னவர்பால்
            பெற்றநிதிக் குவைகொண்டு

என்று பாடிக் காட்டினர்.  இதுவே  “ கொள்ளும் இயல்பு “  ஆகும்.

    சிறுத்தொண்டர் வடமொழி அறிந்தவர் என்பதை நம் சேக்கிழார் சொல்லால்தான் நாம் அறியவேண்டியவராய் உள்ளோம்.  இதனை அவர்  “ ஆயுள் வேதக் கலையும் அலகில்