பக்கம் எண் :

வடநூல

128

             காப்புப் பருவம்

வடநூல்  கலையும் தூய  படைக்கலத்  தொழிலும்  துறை  நிரம்பப்  பயின்று“   என்று அறிவித்திருத்தலைக் காண்க.

    வேடர்கள் எவ்வெவ் உணவு உண்பர் என்பதை மறவாது,

        செந்தினை இடியும் தேனும்
            அருந்துவர் தேனில் தோய்த்து
        வெந்தஊன் அயில்வார் வேரி
            விளங்கனி கவளம் கொள்வார்
        நந்திய ஈயல் உண்டி
            நசையொடு மிசைவார் வெவ்வே
        றந்தமில் உணவின் மேலோர்
            ஆயின அளவி லார்கள்

என்று அழகுறப் பாடியுள்ளமை காண்க.

    இங்ஙனம் எல்லாம் அரிய குறிப்புக்களைப் பாடியுள்ள காரணம் பற்றியே இவர் “செப்பரிய ஆய *** அறியவலர்”  என்று ஈண்டுக் கூறப்பட்டனர்.    ‘ வெய்ய ‘ என்பது விரும்பத் தக்கது என்ற பொருள் தருதலை  “ வெய்யமுலை “  என்று இலக்கியங்களில் வருதல் கொண்டு தெளிக.

    இன்னோரன்ன காரணங்களினால்தான் உமாபதி சிவாசாரியார் இவரைப்பற்றிப் பாடிய புராணத்துள்,

ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மில்
    ஒருமரபோ ஒருபெயரோ ஒருகாலம் தானோ
பேருலகில் ஒருமைநெறி தரும்கதையோ பன்மைப்
    பெருங்கதையோ பேர்ஒன்றோ அல்லவே இதனை
ஏருலகெ லாம்உணர்ந்தோ தற்கரிய வன்என்
    றிறைவன்முதல் அடிஎடுத்துக் கொடுத்தருளக் கொண்டு

பாருலகில் நாமகள்நின் றெடுத்துக்கை நீட்டப்
    பாடிமுடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார்