இத
இத்தகைய
அருட் குருமூர்த்தம், சைவ சித்தாந்த உண்மைகள் உலகில் எங்கும் பரவத் திருக் கயிலையில் கல்லால
விருட்சத்தின்கீழ் தட்சணாமூர்த்தியாக எழுந்தருளி ஸ்ரீ கண்ட பரமேஸ்வரனாகத் திரு நந்திதேவர்க்கு
உபதேசிக்க, அவர் சனற்குமார முனிவர்க்கும், அவர் சத்திய ஞானதரிசினிகட்கும், அவர் பரஞ்சோதி
முனிவர்க்கும் முறையே உபதேசித்தனர். இச் சித்தாந்த உண்மை உபதேசம் இம்மண்ணுலகில் அகச்சந்தான
நெறியாக வந்தருளியது. இதனை மண்ணுலகில் பரப்பிய இந்நால்வர்களைத் தேவ சந்தானத்தார் என்பர்.
இவர்களை அகச் சந்தான குரவர்கள் என்றும் கூறுவர்.
அகச்சந்தான
குரவர்களுள் நாலாமவராகிய பரஞ்சோதி முனிவர், மெய்கண்டார்க்குத் திருவருள் பாலித்து உபதேசம்
புரிய, அவர்பால் அருள் நந்தி சிவம் திருவருள் பெற, அவருக்கும் பிறகு மறைஞானசம்பந்தர்
உபதேசம் தீட்சை முதலியன பெற, அவர்பால் உபாபதி சிவாசாரியர் நல் உபதேசம் பெற்றனர். இந்நால்வரும்
புறச் சந்தான குரவர் ஆவார்.
இங்கு நான்காம்
குரவராகிய உமாபதி சிவாசாரியருக்குப் பின் நியமனம் பெற்றவர் அருள் நமசிவாயர் ஆவார். இவர்பால்
தீட்சை பெற்றவர் சித்தமூர்த்திகளாகிய சிவப்பிரகாசர் ஆவார். இவர் தமது திருவருள் காரணமாகப்
பஞ்சாட்சர தேசிகரென நமசிவாய மூர்த்திகளைத் திருவாவடுதுறையில் குருமூர்த்தமாக நியமித்தனர்.
இங்ஙனம் மெய்கண்டார்
முதல், நமசிவாய மூர்த்திகள்வரை வந்த பரம்பரை பூத பரம்பரை எனப்படும். இப்பரம்பரையி்னை
உபதே பரம்பரை என்றும் கூறுவர். ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகராம் நமசிவாய மூர்த்திகட்கும் பின் வந்த
வருகின்ற பரம்பரை அபிஷேகபரம்பரை என்ற பெருமைக் குரியது. இன்னோ ரன்ன பரம்பரை முறைகளை உள்ளடக்கியே,
திரு பிள்ளை அவர்கள் “ ஓங்குகயிலாய பரம்பரை “
|