New Page 1
பெயருடன் இருந்தனர்.
இது கீழ்வரும் தொடர்களால் நன்கு விளங்கப்பெறும்.
1. மணவில்கோட்டத்து
மேலப்பழுவூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் அரையன் சங்கர நாராயணன்.
2. புலியூர்க்கோட்டத்துக்
குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்
3. மேலூர்க்கோட்டத்துக்
காவனூர்ச் சோழன் முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்திமலையன்.
4. புலியூர்க்கோட்டத்துக்
குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமச் சோழப்
பல்லவன். இவரே சேக்கிழார்.
5. குன்றத்தூர்ச்
சேக்கிழான் பலாராவாயன் களப்பாளராயன்.
6. குன்றத்தூர்ச்
சேக்கிழான் அம்மை அப்பன் பராந்தக தேவன் என்ற கரிகாலச் சோழப் பல்லவராயன்.
7. குன்றத்தூர்ச்
சேக்கிழான் புனவப் பெருமான் என்ற துண்டக நாடு உடையான்.
8. குன்றத்தூர்ச்
சேக்கிழான் பட்டியதேவன் ஆட்கொண்டான்.
9. குன்றத்தூர்ச்
சேக்கிழான் அரையன் ஆண்கொண்ட தேவன் என்ற முனையதரையன்.
10. குன்றத்தூர்ச்
சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப் பெருமாள். இவ்வாறான சேக்கிழார் குடியினருள்
நந்தம் சேக்கிழாரே குலக் கதிராய் விளங்குதலைக் காண்க. இக்குறிப்புக்கள் கல்வெட்டுக்களால்
அறிய வந்தவை.
வேளாண்குடி மேம்பட்டகுடி
என்பதை எவரும் அறிவர். அந்தண மரபினராம் திருஞான சம்பந்தர் இம் மரபினர் மாண்பைக் கூறும்போது,
”வேளாளர் என்றவர்கள் வள்ளன்
|