பக்கம் எண் :

New Page 1

136

             காப்புப் பருவம்

ஆண்டார் வாக்கில் தமிழ்ச் சங்கம் அதில் கபிலர், பரணர், நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல்புலவோர் என்பது காணப்படுகிறது. சுந்தரர் வாக்கில் புலவர்கள் என்பது இல்லை நம்பியார் வாக்கில் புலவர்களே என்னும் சொல் உளது.  சேக்கிழார் தம் பாடல்களில் “ புலவர் “  என்ற சொல்லே காணப்படுகிறது.  சுந்தரரும் புலவர் என்றுதான் பாடியுள்ளார்.  இச் சொல் ஆட்சியினால் பொய்அடிமை இல்லாத புலவர் என்னும் தொடர்தனி அடியார் ஒருவரையேதான் குறிக்கும் என்பதும், தொகை அடியார்கள் என்று கருதப்படு்ம் சங்கப் புலவர்களைக் குறிக்காது என்பதும் உய்த்து உணரக் கிடைத்தல் காண்க.  சுந்தரர் கருத்துப் “ பொய்யடிமை இல்லாத புலவர் என்பார், தனி அடியாரே அன்றித் தொகை அடியார்கள் அல்லர் என்பதுதான் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிடலாம்.  இதனை அவர் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையில் அமைந்த பாடல் போக்கைக் கொண்டே நிலைநாட்டிவிடலாம்.

    சுந்தரர் பொய்யடிமை இல்லாத புலவரைத் தனியடியாரைப்பற்றிக் கூறிக்கொண்டு வரும் பாடலில்தான் வைத்துப் பாடியுள்ளார்.  தொகையடியார்களைக் குறிக்கும் அனைவரையும் தனித்த ஒரு பாட்டில் அமைத்துப் பாடியுள்ளார்.  சுந்தரர் பொய்யடிமை இல்லாத புலவரைத் தொகை அடியாராகக் கருதி இருப்பாரேல், எவ்வாறேனும் தொகையடியாரைக் குறிப்பிட்டுள்ள பாடலில் புகுத்தி இருப்பார்.  ஆகவே, பொய்யடிமை இல்லாத புலவர் ஒரு தனி அடியாரே என்பது, தெளிவுற அறியவரும் குறிப்பாகும்.

    ஈண்டு ஓர் ஆசங்கை எழக்கூடும்.  அதாவது தில்லைவாழ் அந்தணர்களும் தொகையடியார்கள் ஆதலின், அவர்களைத் தனி அடியார்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்ட பாடலில் குறித்திருப்பதுபோல் பொய்யடிமை இல்லாத புலவராம் தொகை அடியார்களையும் தனியடியார்களைக் குறிப்பிடும்பாடலில் இணைத்துப் பாடினர் என்பது.   “ தில்லைவாழ்