பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

137

அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் “  என்பது திருவாரூர் தியாகேசன் வாக்காதலின், அதனை முதலில் வைத்துப் பாடவேண்டிய முறையில் அங்ஙனம் பாடினர் என்று உணர்தல் வேண்டும்.

    மேலும், பொய்யடிமை இல்லாத புலவர் தொகை அடியார் அல்லர்.  தனிஅடியாரே என்ற விளக்கத்தினை ஐயம்திரிபு அற அறியவேண்டின், யான் எழுதியுள்ள  “ பொய்யடிமை இல்லாத புலவர் யார் “ என்னும் நூலினைப் படித்து அறிய வேண்டுகின்றேன்.

    நம்பி ஆண்டார் நம்பிகள் சங்கப் புலவர்களைக் குறிக்கும்போது, கபிலர், பரணர் நக்கீரர்களை மட்டும் எடுத்துக் காட்டி அவர்கள் திருவாலவாய் அரன் அடிக்கே பொருள் அமைத்து இன்பக் கவி பல பாடும் புலவர்கள் என்றருளியுள்ளனர்.  இம்மூவரும் சிவபெருமான்மேல் பாடல்களைப் பாடியவர் என்பது உண்மை.

    நக்கீரர், திருஎழுக் கூற்றிருக்கை என்னும் நூலின் வெண்பாவில் தமக்கு மதுரைச்சொக்கர் உண்டாக்கிய குட்டநோய் தீர  “ என்மேல் மெய் எரிவு தீர்ப்பணித்தருள் வேதியனே “ என்று வேண்டுவதாலும்,  “ நட்டம் ஆடிய நம்ப “ என்ற திருஎழுக் கூற்றிருக்கையின் தொடரால் மதுரை வெள்ளி அம்பலக் கூத்தனைப் பாடிய குறிப்பாகும் என்பதாலும், பெருந்தேவபாணி என்னும் நூலில்  “ கூடல் ஆலவாய்க்குழகன் ஆவது அறியாது அருந்தமிழ் பழித்தனன் “  என்றும், வெண்பாவில்  “ விரைந்து என்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே “  என்று பாடியிருப்பதாலும் இவ்விரு நூற்கள் திருவாலவாய் அரன்மீது பாடப்பட்டன என்று கூறலாம்.  கோபப்பிரசாதம் என்னும் நூல் ஆலவாய்சொக்கனது சீற்றம் தணியப் பாடப்பட்டது என்று கொண்டால், அது மதுரைப் பெருமான்மீது பாடப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.  ஆனால், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி திருவீங்கோய்மலை எழுபது,