New Page 1
திருவலஞ்சுழி
மும்முணிக் கோவை ஆகிய நூல்களின் பெயர்களைக் காணும்போது, அவை மதுரைச் சுந்தரேசப்
பெருமான்மீது பாடப்பட்டவை அல்ல என்பது தெரிய வருதல் காண்க. போற்றித் திருக்கலிவெண்பா
என்னும் நூலின் இறுதியில், காளத்திபோற்றி கயிலைமலை போற்றி “ என்னும் அடிவருதலில் இதுவும்
மதுரையில் பாடப்படவில்லை என்பது புலனாகின்றது.
திருமுருகாற்றுப்படை
என்னும் நூல் சிவபெருமானைப் பற்றியது அன்று. முருகனைப் பற்றியது. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
அடியாரைப் பற்றியதன்றி, ஆண்டவனைப் பற்றியதன்று. கார் என்னும் நூல் மேகத்தைப் பற்றியது.
அதில் சிவபெருமான் பற்றிய குறிப்பு ஒவ்வொரு பாட்டிலும் இருந்தாலும், அதில் மதுரைச் சொக்கனைப்
பற்றிய ஒரு சொல்லும் இலது. மேலும் நக்கீரர் மானிடர்களையும் பாடி இருப்பதைச் சங்க நூல்களில்
காணலாம். நக்கீரர் இறைவன் எழுதித் தந்த பாட்டைக் குற்றம் என்று கூற, அதுபோது மதுரைச்
சொக்கலிங்கப் பெருமான் புலவர் வடிவில் வந்து, தாம் இறைவர் என்று தோற்றுவித்தபோதும், “ சடைகொடு
வெருட்டவேண்டா சாற்றிய செய்யுள் குற்றம் குற்றமே “ என்று எதிர்மொழி பகர்ந்த நக்கீரர்
பொய்யடிமை இல்லாத புலவர் தொகுப்பில் எங்ஙனம் சேரற்கு உரியவர்?
கபிலரும் திருவாலவாய்
அரனடிக்கே இன்பக்கவி புனைந்தார் எனல் ஒண்ணாது. இவர் பாடிய மூத்த நாயனார் இரட்டை மணிமாலை
விநாயகரைப்பற்றிய நூலாகும். சிவபெருமான் இரட்டைமணிமாலை என்னும் நூலில் பிற தலங்களின்
குறிப்புக்கள் உள்ளனவே அன்றி, மதுரையைப் பற்றி ஒரு சொல்லும் இலது. சிவபெருமான் திருவந்தாதி
என்னும் நூலில் “ கூடற்கா வாலிகுரை கழற்கா நல்நெஞ்சே. கூடற்காவவிதாக் கூர் “ என்ற அடிகளில்
கூடல் (மதுரை) பற்றிய குறிப்புளது. ஆனால், இந்நூலில் பல தலங்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
இந்த அமைப்புக்களைக் காணும்போது, இந்நூல் மதுரைச் சொக்கநாதர்மீது
|