பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

139

பாடப்பட்டது என்பதை ஏற்றல் அரிதாகிறது.  கபிலர் மக்களையும் பாடியுள்ள பாடல்கள் சங்க நூற்களில் உள்ளன.

    பரணர் சிவபெருமான்மீது படிய நூல் ஒன்றே ஆகும்.  அது சிவபெருமான் திருவந்தாதி என்பது.  அதில் ஒரு பாட்டில்  ‘ திருவாலவாய்  சென்று சேராது ‘ என்னும் தொடர் வருகிறது.  ஆனால், அந்நூலில் பல சிவ தலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.  இதுகொண்டு நோக்கும்போது,  இந்நூலும் மதுரைப்பெருமான்மீது பாடப்பட்டது என்பதை ஏற்க இயலா நிலையில் உள்ளோம்.  இவரும் மக்களையும் பாடியுள்ளனர்.  அப்பாடல்களைச் சங்க நூற்களில் காணலாம்.

    சங்கப் புலவர்கள் சிவபெருமானையே பாடும் புலவர்கள் அல்லர்.  திருமாலையும்,  முருகனையும் பாடும் புலவர்கள்.  இக்குறிப்பையும் சங்க நூல்களால் அறியலாம்.  ஆகவே, சங்கப் புலவர்களைப் பொய்யடிமை இல்லாப் புலவர் என அறிதற்கில்லை.

    திருத்தொண்டர் புராண சார நூலாசிரியர் சேக்கிழார்க்குப் பிற்பட்டவர்.  அவர் கருத்தோடு சேக்கிழார் கருத்தையும் ஒப்புநோக்குதல் வேண்டா எனினும், இரண்டொரு குறிப்புக்களைக் குறித்தல் தவறாகாது.  புராணசாரத்தில் கபிலர், பரணர் பெயர்கள் காணப்படுகின்றனவே அன்றி, நக்கீரர் பெயர் காணப்பட்டிலது.  மதுரைச் சங்கத்தைப் பற்றிய குறிப்பும் இல்லை.  கபிலர், பரணர் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நாற்கவிகளைப் பாடினர் என்ற குறிப்புளது.  முதல் இரண்டு கவிகளைப் பாடினார்கள் என்று கூறினும் கூறலாமே அன்றிப் பின் இரண்டுவகையான கவிகளைப் புனைந்தனர் என்பதற்குச் சான்றுகள் இல்லை. இவ்விருவர்கள் சிவபெருமான்மீது பாடிய பாடல்கள் உளவே அன்றி, மன்றுரை ஆடல் மேவிய கோன் இருதாளில் பாடினார் என்று கொள்ளுதற்கும் இல்லை.  அவரது பாடலாலும், பொய்யடிமை இல்லாத புலவர் சங்கப் புலவர் என்று ஏற்றற்கு இடம் இல்லை என்று உணரவேண்டியவராய் உள்ளோம்.