பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

147

விளங்கும், துறைக்கு-கரைக்கு, அண்ட-நெருங்க, கந்தி-பாக்குமரம், அம்-அழகிய, பாலறாவாயர் என்பார் சேக்கிழாரது தம்பியார், முன் தோன்றலை-முன்பிறந்த தமையனாரான சேக்கிழாரை, கறைக்கண்டன்யாப்பு-திருத்தொண்டத் தொகையில் கறைக் கண்டன் என்று தொடங்கும் எட்டாவது பாடல், ஐந்து அதிகாரி-படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருள் என்னும் ஐந்து தொழில்களை முறையே செய்கின்ற நான்முகன், திருமால், உருத்திரன், மகேச்சுரன், சதாசிவன் ஆகிய ஐந்து தலைவர்கள், மேல் ஒர் அதிகாரி-இவ்வைந்து அதிகாரிகளுக்கும் மேலோனான ஒப்பற்ற சிவபெருமான், மலைமங்கை-இமயமலையரசன் மகளான உமாதேவி, ஒருபால்-ஒரு பக்கம், (இடப் பக்கம்) நிருவிகாரி-காம விகாரம் ஒன்றும் இல்லாதவன்.  நிர் அகங்காரி-செருக்கு இல்லாதவன், (அகங்காரம் முதலான தத்துவம் கடந்தவன்.) காரி ஆகாரி-விஷத்தை உண்டவன், காரி-விஷம், மறை-வேதமும் அண்டஅரும்-அணுகுதற்கு அரிய, சோதி-ஞானதீப ஒளியாய் இருப்பவன, ஓங்காரி-பிரணவ வடிவாய், பொருளாய் இருப்பவன், அருள்-திருவருள் சத்தி, அவாம்-விரும்பி ஆம்காரி-எல்லாச் செயல்களையும் செய்பவன், ஐவர்-கணம் புல்லர், காரியார், நெடுமாறர், வாயிலார், முனைஅடுவார்.

விளக்கம் :  பிறைச் சந்திரன் மாலையில் தோன்றுவான், அதுபோது வானில் படர்ந்திருக்கம் மேகம் போகும்போது, சந்திரன் அதில் நுழைந்து போவது போல் காணப்படும்.  இஃது இயற்கை.  ஆனால், பகலில் சந்திரன் காணப்படுதல் இல்லை.  அங்ஙனம் இருந்தும் அவன் பகலில் மேகத்தில் நுழைந்து போவது அதிசயப்படத்தக்கது.  இங்குப் பாலாற்றின் அலை, சங்குகளை வீசி எறிய, அவை பாக்கு மரங்களில் தவழ்ந்து செல்வது மேகத்தின் இடையே பிறைச்சந்திரன் செல்வதுபோல இருக்கிறது என்று கூற வந்ததால்  “ பிறைக் கண்டம் இது பகலில் முகில் நுழைவது அதிசயம் “ என்று பாடப்பட்டது.  சேக்