New Page 1
சேக்கிழார்
தொண்டை நாட்டின் வளத்தைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்து மிகமிகச் சிறப்புடன்
பாடியுள்ளனர். அவர் அந்நாட்டின் சிறப்பைத் தொடங்கும்போதே,
ஏயு மாறுபல்
உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி
ஆயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை
போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவம்
செய்தது தொண்டை நன்னாடு
நன்மை
நீடிய நடுநிலை
ஒழுக்கத்து நயந்த
தன்மை
மேவிய தலைமைசால்
பெருங்குடி தழைப்ப
வன்மை
ஓங்கெயில் வளம்பதி
பயின்றது வரம்பின்
தொன்மை
மேன்மையில்
நிகழ்பெரும் தொண்டை நன்னாடு
கறைவி
ளங்கிய கண்டர்பால்
காதல்செய் முறைமை
நிறைபு
ரிந்திட நேரிழை
அறம்புரிந் ததனால்
பிறைஉ ரிஞ்செயில் பதிபயில்
பெருந்தொண்டை நாட்டு
முறைமை
யாம்என உலகினில்
மிகுமொழி உடைத்தால்
என்றும்,
மேலும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலவளங்களையும் சிறப்புற வர்ணித்துள்ளதைக்
காணலாம். காஞ்சி புராணத்தும், கந்த புராணத்தும் தொண்டை நாட்டின் வளத்தை நன்கு தெரியலாம்.
தொண்டை
மண்டல சதகத்துள்
“ கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி
யொடுதழீஇய தொண்டமண்டலம் “
என்றும்,
|