பக்கம் எண் :

New Page 1

152

             காப்புப் பருவம்

    பொதுவாகக் கூறப்பட்டாலும் தொண்டைநாடு அவன் காலத்தில் சோழ நாட்டு ஆட்சியில் கலந்திருந்தமையின்,  தொண்டை நாட்டையும் இங்ஙனம் செம்மைப்படுத்தினான் எனபது தெரிகிறது.  பெரியபுராணமும்,

    என்றும் உள்ளஇந் நகர்கலி யுகத்தில்
       
இலங்கு வேல்கரி கால்பெரு வளத்தோன்
   
வன்தி றல்புவி இமயமால் வரைமேல்
       
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
   
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
       
திருத்து காதம்நான் குட்பட வகுத்துக்
   
குன்று போலும்மா மதில்புடை போக்கிக்
       
குடிஇருத்தின கொள்கையில் விளங்கும்

என்கிறது.

    சங்ககால இளந்திரையன், இளங்கிள்ளி ஆகியவர்கள் வளமுற ஆண்டனர்.  பல்லவர்களும் ஏரி, கால்வாய்களை வெட்டி ஆண்டனர்.  அங்குச் சைவ, வைணவ, பௌத்த மதங்கள் வளர்ச்சியுற்றிருந்தன.  இன்னோரன்ன சிறப்புக்களும், வளங்களும் பெற்றது தொண்டை நாடு தொண்டை நாட்டின் எல்லை இன்னது என்பதைக் கம்பர்,

    மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
   
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு-பார்க்குள்உயர்
   
தெற்குப் பினாகி திகழ்இருப தின்காதம்
   
நற்றொண்டை நாடெனவே நாட்டு

என்றனர்.

    குன்றத்தூர் தொன்மையது என்பதாலும், குறும்பர்கள் இருபத்து நான்கு கோட்டங்களாகத் தொண்டை நாட்டைப்பிரித்தனர்.  என்பதாலும்,  கரிகாலன் காடுகொன்று நாடாக்கினான் என்பதாலும், அந்நாடுகளில் ஒன்றான புலியூர்க் கோட்டத்தைச் சார்ந்த குன்றத்தூரும் பழமையானது என்பது தெரிகிறது.  இன்றும் குன்றத்தூரின்