பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

153

காட்சியினை-அங்குள்ள பாழ்பட்ட இடங்களை-நேரில் கண்டவர் அது பழமையானது என்பதை நன்கு உணர்வர்.  இன்றும் சேக்கிழாரின் இளவலான  பாலறாவாயர் வெட்டிய குளம், பாலறவாயர்குளம் எனத் திகழ்கிறது.  சேக்கிழார் பிறந்த இல்லம் இதுபோது அவர் கோயிலாகத் திகழ்கிறது.  இங்கும் பல கல்வெட்டுக்கள் உள்ளன.  ஆகவே, இது தொல்புகழ்குன்றை ஆயிற்று.

    தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சியம்பதி. அதன் மாண்பைக் கூறவந்த புலவர் ஒருவர்.

    மலைதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
   
ஒலியும் பெருமையும் ஒக்கும்-மலிதேரான்
   
கச்சி படுவ கடல்படா கச்சி
   
கடல்படுவ எல்லாம் படும்

என்று கூறியுள்ளார்.

    இதுவும் தொண்டை நாட்டின் வளத்தைக் காட்டுவதாகும்.

    “ முத்திதரும் நகர் எழில் முக்கியமாம் காஞ்சி “ என்பது தொன்றுதொட்ட உண்மையாகும். ஹுவான்சங் என்னும் சீன தேசத்து யாத்திரிகர் இக் காஞ்சியம்பதிக்கு வந்து சுற்றிப்பார்த்துப் பிறகு இதுபற்றிப் பல குறிப்புக்களை எழுதி, அதில் கி. மு. 5-ஆம் நூற்றாண்டில் புத்தர் தம் சமய போதனை செய்தார் என்கிறார்.  அசோகர் கி. மு.  மூன்றாம் நூற்றாண்டில் பௌத்த மதக் கொள்கைகளைத் தூண்களில் பொறித்து வைத்தனர்.  கி. மு. 2-ஆம் நூற்றாண்டில் இருந்த பதஞ்சலி முனிவர் காஞ்சியைப்பற்றித் தமது விரித்துரையில் குறிப்பிட்டுள்ளனர்.  ஊர் சங்க  காலத்தில் கச்சி எனப்பட்டது.   “ கல்வியில் கரையிலாதார் காஞ்சிமா நகரம் “  என்பது அப்பர் வாக்கு.  காஞ்சியின் மாண்பைக் காண விழைவார் பெரும்பாணாற்றுப் படையாகிய சங்க நூலில் பரக்கக் காணலாம்.  இவ்வாறு தொண்டை நாடும், காஞ்சியும், குன்றத்தூரும் வளமும் புகழும் கொண்