பக்கம் எண் :

ஒன

168

             காப்புப் பருவம்

        ஒன்றதாய் அநேகசக்தி
            உடையதாய் உடனாய் ஆதி
        அன்றதாய் ஆன்மா வின்தன்
            அறிவொடு தொழிலை ஆர்த்து
        நின்றுபோத் திருத்து வத்தை
            நிகழ்த்திச்செம் பினில்க ளிம்பேய்ந்து
        என்றும்அஞ் ஞானம் காட்டும்
            ஆணவம் இயைந்து நின்றே

என்று கூறுதல் காண்க.  சிவஞான போத வெண்பா,

    நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னில்களிம்பும்
    சொல்லில் புதிதன்று தொன்மையே

என்று கூறுகிறது.

    ஆகவே, இது மூலமலம் எனப்படும்.  ஆணவமலம் உயிருடன் கலந்து இருப்பினும் தன்னையும் பொருளையும் காட்டாது.  இதனைத் திருவருட்பயன்,

    ஒருபொருளும் காட்டா திருள் ;  உருவம் காட்டும் ; 
    இருபொருளும் காட்ட நிதி

என்று அறிவிக்கிறது.

    இவ்வாணவ மலம் உயிருடன் மன்னில் இருத்தலைத் தாயுமானவரும்,

    ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ் ஞானத்
    தாணுவினோ டத்துவிதம் சாறும்நாள் எந்நாளோ

என்றும்,

    ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐவகையாகிக்
    காணவத்தைக் கப்பாலைக் காணுநாள் எந்நாளோ

என்றும்,