6
6. ஸ்ரீ குமாரசாமி தேசிகர்.
7. ஸ்ரீ பிற்குமார தேசிகர். 8. ஸ்ரீ மாசிலாமணி தேசிகர். 9. ஸ்ரீ இராமலிங்க தேசிகர். 10. ஸ்ரீ வேலப்ப
தேசிகர். 11. ஸ்ரீ பின் வேலப்ப தேசிகர். 12. ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர். 13. ஸ்ரீ அம்பலவாண
தேசிகர். 14. ஸ்ரீ வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். 15. ஸ்ரீ அம்பலவாண தேசிகர். 16. ஸ்ரீ மேலகரம்
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். 17. ஸ்ரீ அம்பலவாண தேசிகர். 18. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (இவரே திரு
பிள்ளை அவர்களின் காலத்தவர்) 19. ஸ்ரீ வைத்திலிங்க தேசிகர். 20. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண மூர்த்திகள்.
இதுபோது 21 வது குருமகா சந்நிதானமாகத் திகழ்பவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய
சுவாமிகள்.
சிவப்பிரகாசம்
என்பது உமாபதி சிவாசாரியார் எழுதியுள்ள சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்று: இது சிவஞானபோதம்
சிவஞான சித்தியாரைத் தழுவிச் சார்பு நூலாகச் சைவ சித்தாந்த உண்மைகளைப் பாயிரம் உட்பட
நூறு விருத்தயாப்பினால் அறிவிக்கும் நூல். சிவத்தை விளக்கிக் காட்டலின் இது சிவப்பிரகாசம்
எனப் பெயர் சூட்டப்பட்டது. சிவப்பிரகாசத்தில் நுதலிய பொருள்,
புறச்சமயத் தவர்க்கிருளாய்
அகச்சமயத் தொளியாய்
புகல்அளவைக் களவாகி
பொன்பணிபோல் அபேதம்
பிறப்பிலதாய்
இருள்வெளிபோல் பேதமும்சொல் பொருள்போல்
பேதாபே தமும்இன்றிப்
பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய்
உடல்உயிர்கள் அருக்கன்
அறிவொளிபோல்
பிறிவரும்அத் துவிதம் ஆகும்
சிறப்பினதாய் வேதாந்தத்
தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத்
தெரிக்கல் உற்றாம்
என்பது. இந்நூலில்
வரும் அவை அடக்கச் செய்யுள் பன் முறையும் படித்துச் சுவைத்தற்கு உரியது.
தொன்மையவாம் எனினும்எவையும்
நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும்எவையும்
தீதாகா துணிந்த
நன்மையினார் நலம்கொள்மணி
பொதியும்அதன் களங்கம்
நவைஆகா தெனஉண்மை
நயந்திடுவர் நடுவாம்
|