பக்கம் எண் :

அவர

180

             காப்புப் பருவம்

அவர்கள் சுந்தரரை வியக்கும் முறையில்,  “ இருபைங்கோதையாரை வேட்டபான்மைக் கிணங்க ஓர் இரு புதல்வியார்தமைப் பயவாமலே பயந்த “  என்றனர்.  இப் பெண் மணிகள் பேரன்பராம் கோட்புலியார் பெற்ற பெண்கள் ஆதலாலும், பேரறிவுப் பெருமானாராகிய சுந்தரரின் அன்புப் பெண்கள் ஆதலாலும் ஒப்பற்ற நிலையினை உற்றமையின்,  “ ஓர் இரு புதல்வியார் “ எனப்பட்டார்.

    சுந்தரர் பரவையாரையும், சங்கிலியாரையும் வேட்டனர் (மணந்தனர்) ஆயினும், வேட்டே (விரும்பியே) பெற்றனர் ஆதலின்,  “ பைங்கோதையாரை வேட்ட, என்றனர்.  அருள்மொழித்தேவர் அருள் வாக்காலும் இக்கருத்துப் புலனாகிறது.

        விரவுபெருங் காதலினால்
            மெல்லியலார் தமைவேண்டி
        அரவின்ஆ ரம்புனைந்தார்
            அடிபணிந்தார் ஆரூரர்

என்றும்,

    இங்கு நுமக்குத் திருமாலை
        தொடுத்தென் உள்ளத் தொடைஅவித்த
    திங்கள் வதனச் சங்கிலியைத்
        தந்தென் வருத்தம் தீரும்என

என்று சேக்கிழார் பாடிக் காட்டலைக் காண்க.

    சுந்தரரைக் கோட்புலியார் தம் மக்களை அடிமையாக ஏற்றருள வேண்டினார்.  அந்நிலையில் சுந்தரர் அவர்களைத் தம் மக்களாகவே ஏற்றார்.  இதனைச் சேக்கிழார் பாடல் கொண்டு தெள்ளத் தெளியக் கண்டோம்.  இவர் பரவையாரைக் கண்டு மோகம் கொண்டும், “ கண்ணுதலைத் தொழும் அன்பே கைக்கொண்டு செல உய்ப்ப “ என்று சேக்கிழார் கூறுதலாலும், பரவையாரைக் கண்டபோது,  “ சிவன் அருளோ “ என்று நினைத்தலாலும், “ ஈசன் அருள்