சுந
சுந்தரர் தம் திருமணத்தில்
வேதியராக வந்து இறைவரிடம் ‘ பித்தனோ மறையோய்‘ “ஆளாய் அந்தணர் அடிமை செய்தல் என்ன
முறை? பழைய மன்றாடி போலும் வெண்ணெய் நல்லூராயேல் உன்பிழை நெறிவழக்கை ஆங்கே பேச நீ போதாய்“
என்றெல்லாம் வன்மொழி கூறியதைக் காண்க. இவற்றை இறைவர் அன்பு மொழிகளாக ஏற்றுக் கொண்டு
“ மற்றுநீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை “ என்று அருளிச் செய்து வன்தொண்டர்
என்னும் தீட்சா நாமமும் ஈந்தருளினர். தமக்கு வன் தொண்டன் என்னும் திருப்பெயர் அமைந்திருப்பதைச்
சுந்தரரே ‘ வனம் பகை அப்பன் வன்தொண்டன், வன்தொண்டன் ஊரன்” என்று தம்பதிகங்களில்
பாடியுள்ளனர். ஆகவே, ஈண்டு வன்தொண்டர் எனக் குறிக்கப்பட்டார்.
சுந்தரர் வன்தொண்டரே
ஆயினும் இறைவர்க்கு இன்தொண்டரே. இவர் இன்தொண்டர் என்றதனால்தான், இறைவர் இவரைத் தோழராக
ஏற்றனர். இதனைச் சேக்கிழார்,
வாழிய மாமறைப்
புற்றிடங்கொள் மன்னவர்
ஆர்அரு ளால்ஓர்
வாக்குத்
தோழமை ஆகஉனக்கு
நம்மைத் தந்தனம்
நாம்முன்பு தொண்டு
கொண்ட
வேள்வியில் அன்றுநீ
கொண்ட கோலம்
என்றும் புனைந்துநின்
வேட்கைதீர
வாழிமண் மேல்விளை
யாடுவாய் என்றாரூரர்
கேட்க எழுந்த
தன்றே
என்று கூறியுள்ளனர்.
மேலும், இவரைச் சங்கிலியாருக்கு அறிமுகப் படுத்தும் போது,
சாரும் தவத்துச்
சங்கிலிகேள்
சால என்பால்
அன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய்
நல்லூரில்
|