பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

193

    சேக்கிழார் தொண்டர் வரலாற்றை அநபாய சோழன் மட்டும் மகிழப் பாடியவர் அல்லர்.  உலகமே மகிழப்பாடியவர்.  இதில் ஐயம் இல்லை.  அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்களின் இத்தகையவர்கள் என்று பாடியிருக்கும் போக்கே இஃது உலகம் உவக்கும் நூல் என்பது புலனாகிறது.

    சேக்கிழார் வாக்குடன் சேக்கிழார் புராணமும் கூடச் சேக்கிழார்க்கு மூல நூல்கள் சுந்தரர் பாடல்களும், நம்பியாண்டார் நம்பிகள் பாடல்களும் ஆகும் என்பதை,

    செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக் கேட்பச்
        சேக்கிழார் குரிசில்உரை செய்வார் ஞாலத்
    தம்பலவர் திருத்தொண்டர் பெருமை ஆரூர்
        அடிகள்முதல் படிஎடுத்துக் கொடுக்க நாவல்
    நம்பிபதி னொருப்பாட் டாகச் செய்த
        நலமலிதொண் டத்தொகைக்கு நாரைஊரில்
    தும்பிமுகன் பொருள்உரைக்க நம்பி ஆண்டார்
        சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதி செய்தார்

    ஆயுமறை மொழிநம்பி ஆண்டார் நம்பி
        அருள்செய்த கலித்துறைஅந் தாதி தன்னைச்
    சேயதிரு முறைகண்ட ராச ராச
        தேவர்சிவா லயதேவர் முதலாய் உள்ள
    ஏயகருங் கடல்புடைசூழ் உலகம் எல்லாம்
        எடுத்தினிது பாராட்டிற்று என்ன?

என்று கூறுதலால் அறியலாம்.

    சேக்கிழார் தொண்டர் வரலாறு அனைத்தையும் சொன்னார் என்று திரு பிள்ளை அவர்கள் கூறியதில் ஓர் அரிய குறிப்புக் காணப்படுகிறது.  இதனைச் சிறிது ஈண்டு ஆராய்தல் சிறப்புடைத்து.

    சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையின் ஈற்றுப் பாடலில் சடையனாரையும், இசைஞானியாரையும் குறிப்பிட்டுள்ள இடத்தில், ஏனைய நாயன்மார்களுக்குக் கூறியது போல அடியேன், அடியேன், என்று கூறாமல், தாம் அவ்