பக்கம் எண் :

194

             காப்புப் பருவம்

விருவர்கட்குத் திருமகனார் என்ற அளவில் சடையன் இசை ஞானி காதலன், என்று மட்டும் குறித்துச் சென்றனர்.  இவ்வாறு நம்பி ஆரூரர் கூறியுள்ள உட்கருத்தை ஆராய்தல் வேண்டும்.  அப்படி ஆய்கிறபோது, சுந்தரர் சடையனார், இசைஞானியார் ஆகிய இருவர்களையும் தம் பெற்றோர்களாக எண்ணிப் பாடினார் என்பதும், அவர்களை அடியார்களாகக் கருதிற்றிலர் என்பதும் தெரியவருகின்றன.   பெற்றோர்களைப்  பிள்ளைகள் குறிப்பிடுவது தமிழ் நாட்டு மரபு.  அம்மரபுபற்றியே இங்ஙனம் கூறினார் என்க.   “ இல்லை சடையனாரையும், இசைஞானியாரையும் அடியார்களாகவே கருதினார் சுந்தரர். “  எனில், சுந்தரருக்குப் பழிவருமே அன்றிப் புகழ் வராது.  ஏன்? திருஞான சம்பந்தரின் பெற்றோரையும், திருநாவுக்கரசரின் பெற்றோரையும், கூறாது தம் பெற்றோர்கள் இருவரை மட்டும் கூறிச் சுயநலத்தைத் தோற்றுவித்துக் கொண்டார் என்ற காரணத்தால் ஆகும்.  ஆகவே, அப்பழிவாராதபடி நம்பி ஆரூரரை நாம் காண வேண்டும்.  ஆகவே, வன்றொண்டர் தம் பெற்றோர்களைப் பெற்றோராகவே கருதிப் பாடினாரே அன்றி,  அடியார்களாகக் கருதிற்றலர் என்று முடிவு காணுதல் ஆராய்ச்சிக்கு ஏற்றதாகும்.  இன்னும் இதன் விளக்கத்தைக் காண அவாவுவார், அடியேன் எழுதியுள்ள “ பொய்யடிமை இல்லாத புலவர் யார்? “ என்னும் ஆய்வு நூலில் காணவும்.

    சேக்கிழாரது மனம், வாக்கு, காயம் ஆகிய இம்மூன்றும் தூயன.  இவற்றின் துணைகொண்டுதான் மன்னன் மனத்தை மாற்ற முடிந்தது.  மேலும்,  இவர் தீயனவற்றைத் தம் வாயால் கூறார்.  அமங்கலத்தையும் மங்கலமாகவே சொல்ல வல்லவர்.  கொடூரமான நிகழ்ச்சிகளையும், நாகரிகமாகவே கூறுபவர்.  Êசிலவற்றை வெளிப்படையாகக் கூறாமல் மறை முகமாகவே செப்புவர்.  இவற்றை இவரது தூல் முற்றிலும் காணலாம்.

    மெய்ப்பொருள் நாயனாரை முத்தநாதன் குத்தி விட்டான்.  நாயனார் எழ ஒண்ணாப் பேருறக்கம்கொண்டார்.