பக்கம் எண் :

அத

 

       காப்புப் பருவம்

195

அதாவது இறந்தார்.   “ இதனை புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார் “  என்கிறார்.

    சிறுத்தொண்டர் தம் அருமை மகனை அறுக்கின்றார்.  அந்த நிகழ்ச்சியில் இருவர் மனமும் பேர் உவகை எய்தி  “ அரியவினை செய்வார் “  என்று சேக்கிழார் கூறியுள்ளனர்.  இத் தொடர் அரிதலாகிய செயல் என்பதோடு, செயற்கரிய செயல் என்று பொருள் தருதலையும் காண்க.

    திருநீலகண்டர் மாதர்களின் இச்சையுள் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுகையில் “ இளமை மீதுர இன்பத் துறையில் எளியர் ஆனார் “  என்றும், காரைக்கால் அம்மையார் மணப்பருவம் உற்றதைக் குறிப்பிடுகையில்“ இல் இகவாப்பருவம் “ என்றும் பாடினர்.  இன்னோரன்ன காரணங்களால் இவரது.  வாய் தூய்மை உடையது என்று அறிதலின், திரு பிள்ளை அவர்கள் தூவாய் மலர்ந்த என்று கூறியருளினர்.

    திருவள்ளுவர்  “வாய்ச்சொல்“ என்று கூறியுள்ள தொடர்க்குப் பரிமேலழகர் பொருள் விளக்கம் கண்ட விடத்து,  “ வாய் என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு “  என்றனர்.  பரிதியார்  “ உபதேசத்தோடு கூடிய நல்லோர் சொல் ஆபத்துக் காலத்துக்கு வைத்த உடைமை போல் உதவும், என்றவாறு “  என்று விளக்கினார், “ துறந்தாரின் தூய்மை உடையார் “  என்ற தொடர்க்கு விளக்கம் தரும்போது.  தூய்மை என்பதற்கு மனம் மாசு இன்மை” என்ற விளக்கம் தந்தனர் காளிங்கர்.  அதாவது  “ மனம் வாக்குக் கருமம் என்னும் மூன்றினாலும் தூய்மை “ என்பது.  அகம் தூய்மை என்னும் தொடர்க்குப் பரிமேலழகர் கண்ட பொருள் “ மெய்யுணர்தல் “ என்பது, இவ்வாறு பேரறிஞர் கண்ட தூய்மைகளையுடையது சேக்கிழார் வாக்கு ஆதலின்  “தூவாய்“  என்றனர் என்று கூறினாலும் அமையும்.

    வானவன் எனச் சேக்கிழாரை ஈண்டே சுட்டியதன் கருத்துத் தேவேந்திரனுக்குக் கீழ்ப்பட்ட தேவர்கள் என்ற