New Page 1
பொருளில் அன்று. மேலானவன்
என்ற பொருளில் ஆகும். சேக்கிழார் மேலானவர் என்ற காரணத்தினால்தான் இவர் சைவ ஆலங்களில்
அறுபான்மும்மை அடியார்களின் வரிசையில் வைத்துப் பூசிக்கப்படுகிறார். இவரது நூலும் சைவத் திருமுறைகளில்
ஒன்றாக வைத்துப் போற்றப்படுகிறது. மேலும், இவர் அநபாயச் சோழனால் கவரி வீசப்பட்ட
பெருமைக்குரியர் ஆயினர். இன்னோரன்ன காரணங்களால் இவர் வானவர் (மேலானவர்) அல்லரோ?
தோன்றல் என்னும்
சொல் தமிழில் விகுதி பெறாத ஆண்பால் சிறப்புச் சொல் எனக் கூறப்படுவது. சேக்கிழாரும் ஆண்
பாலினருள் பெருஞ் சிறப்புடைமையின் தோன்றல் எனப்பட்டனர். ஆன்ற என்னும் சொல் நிறைந்த
சான்ற என்னும் பொருளுடையது. சேக்கிழார் அறிவு, தெளிவு. செறிவு, குணம் முதலிய பண்புகள் நிறைந்தவர்.
நிறைவு ஈண்டு, நற்குணம், நற்செய்கை. கல்வி, கேள்வி இவற்றால் நிறைந்த நிறைவு. இவ்வாறு பரிமேலழகர்
பொருள் காண்கின்றார்.
ஆன்ற என்னும்
சொல்லுக்கே பரிமேல் அழகர் மிகுந்த, மேலான, நிறைந்த, உயர்ந்த, வலிய, சிறந்த, உயர்ந்த
அகன்ற, நிரம்பிய என்ற பொருள்களைக் காட்டியுள்ளனர். இன்னோரன்ன காரணங்களால “ ஆன்ற தோன்றல் “எனச் சேக்கிழார் சிறப்பிக்கப்பட்டனர்.
மன்னிய திருப்பாட்டு
என்பது திருத்தொண்டத் தொகையின் இறுதியில் உள்ள பதினோராவது பாட்டாகும். அது,
மன்னியசீர்
மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள்
மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட
செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப்
பாணனார்க் கடியேன்
|