New Page 1
குறித்த நாளில் ஈண்டிறோம்.
ஆகவே, வேறு ஒருநாளில் விழாவைக் கொள்ளவும் “ என்று கூறக் காடவர் கோன் அதிசயித்து, பூசலாரைக்
காணப்புறப்பட்டனர். திருநின்றவூரை அடைந்தனர். பூசலார் கட்டிய கோவிலைத் தேடினர் ; கண்டிலர்.
ஆனால் அங்குள்ளாரை விசாரித்தார். அவர்கள் “ அப்படி ஒரு கோவில் இல்லையே“ என்றனர்.
ஆனால், பூசலார் இருக்கும் இடத்திற்கு அரசரை அழைத்துச் சென்றனர், அவரைக் கண்டு மன்னர் வணங்கித்
தொழுது “ பெரியீர், நீங்கள் கட்டிய கோவில் எங்குள்ளது? அதில் நீர் இன்று சிவபெருமானைத்
தாபிக்கப் போவதாகச் சிவபெருமானே என் கனவில் கூறினார். அக்காட்சியைக் கண்டு வணங்கிப்
போற்றவே இங்கு வந்தேன். “ என்று பணிவாகக் கூறினார்.
பூசலார் மருண்டார்.
இறைவரது திருவருளை வியந்தார். வியந்தவர் அரசனிடம் “ என்னை, இறைவர் தம் பெருங் கருணை !
நான் கோவில் கட்ட எண்ணினேன். பொருள் போதுமானதாகக் கிடைக்கவில்லை. மனத்தால் கட்டலாமா
என்று சிந்தித்துக் கட்டினேன். கட்டிய முறை இது. “ என்று கூறினார். அரசர் கேட்டு மகிழ்ந்து
பூசலார் நாயனாரை தொழுது போயினார். பூசலாரும் மனத்தால் கோவில் கட்டியது போலவே இறைவரையும்
மனத்திலேயே தாபித்து மகிழ்ந்து இறைவன் திருவடியுற்றார்.
இந்நாயனார் மனத்தால்
ஆலயங் கட்டிய முறையினைச் சேக்கிழார் “ அன்பால், காதலில் கங்குல் போதும் கண் படாது எடுக்கலுற்றார் “
என்றனர். “ கங்குல்போதும் கண்படாது “ என்றதனால் ஊண் உறக்கம் இன்றிக் கோவிலைக் கட்டத்
தொடங்கினார் என்பது பெறப்படுகிறது. இது காரணம்பற்றி “ ஆகாரம் முதலிய மறந்து இராப் பகல்
முயன்று “ எனப்பட்டது.
காடவர் கோன் பூசலார்
கட்டிய கோவிலைக் காண வந்த போது, ஊரார் அம்மன்னனிடம் “ செப்பிய பூசல் கோயில் செய்த
தொன்றில் “ என்று கூறினார்கள். இதனால் நாயனார் கட்டிய கோவில் யாவர் கண்ணுக்கும் புலப்படவில்லை
என்
|