ப
பது புலனாகிறது : இதனை அறிவிக்கவே இங்கு “ வையத்து வாழ்வார்கள் நோக்காத வண்ணம் “ எனப்பட்டது.
பூசலார் நாயனார்
கட்டிய ஆலயம் இதுவரையில் எவராலும் கட்டப்படாத ஆலயம். அதோடு அழகிய ஆலயமும் ஆகும். அக்கோயிலின்
புதுமை,
அடிமுதல் உபானம் ஆதி
ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள்
முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம் தானும்
முன்னிய முழத்தில் கொண்டு
நெடிதுநாள் கூடக்கோயில்
நிரம்பிய நினைவால் செய்தார்.
என்ற சேக்கிழார்
வாக்கே நமக்கு நன்கு தெரிவிக்கின்றது. மேலும், அக் கோயில் அழகியதாக இருந்தது என்பதையும்
சேக்கிழார் தம் திருவாக்கில்,
தூயியும் நட்டு மிக்க
சுதையும்நல் வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு
கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியும் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து
என்று கூறியுள்ளனர்.
இவற்றை உட்கொண்டே திரு பிள்ளை அவர்கள் “ நவமணி ஆலயம் புரிந்து “ என்றனர், ஈண்டுத் திரு
பிள்ளை அவர்களின் பேரறிவுத் திறனை வியக்காமல் இருக்க முடியாது. பூசலார் ஆலயம் எடுத்தார்
என்றோ, கட்டினார் என்றோ கூறாமல், ஆலயம் புரிந்து என்றனர். புரிந்து என்னும் சொல்லின்
பொருள் “விரும்பி“ என்பது. இதுவே இதற்குப் பொருள் என்பது “புகழ் புரிந்தார்“ என்ற திருவள்ளுவர்
வாக்கிற்குப் பாமேலழகர் “புகழை விரும்பினார்“ என்று எழுதுதல் காண்க. ஆகவே நாயனார், ஆலயத்தை
விரும்பிச் செயல்களைப் புரிந்தார் என்ற அரிய குறிப்பைக் காட்டிய திரு பிள்ளை அவர்களின்
மாண்பை என்னென்பது !
இறைவர் காடவர்
கோன் எடுத்த கோவிலில் இறைவரைத் தாபிக்க நாள் வைத்தபோது இறைவர் அவர் கனவில்,
|