New Page 1
நேசநாயனார் :
இவர் காம்பிலீ நகரத்தில் சாலியர் குலத்தில் பிறந்தவர். சிவனை இடையறாது சிந்திப்பவர்,
அஞ்செழுத்து ஓதுபவர். கீள், கோவண ஆடை நெய்து சிவனடியார்கட்கு ஈந்து வந்தவர். தொண்டின்
வழியே சிவப்பேறு பெற்றவர்.
கோச்செங்கட்சோழர் : இவரது
பிறப்பு ஒரு தனிச் சிறப்புடையது. சோழ நாட்டில் சந்திர தீர்த்தம் என்ற வனத்தில் ஒரு வெண்ணாவல்
மரம் இருந்தது. அம்மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அந்தலிங்கத்தினை ஒரு யானை நீர்
கொண்டு முழுக்காட்டி மலர் இட்டு வழிபட்டது. இவ்வாறு வனத்தில் யானை பூசித்து வந்ததால் அது திரு
வானைக்கா எனப்பட்டது.
சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின்
மீது மரத்தின் இலை முதலியன உதிராவண்ணம் வலை இழைத்தது. இதனைக் கண்ட யானை அதனை அழித்து
விட்டது. சிலந்தி சினம் கொண்டு யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. யானை தனது துதிக்கையை
நிலத்தில் அறைந்தது. அதனால் சிலந்தி இறந்தது. யானையும் இறந்தது. யானை சிவகதியுற்றது.
சிலந்தி சோழனாகப் பிறந்தது. அச்சோழனே கோச்செங்கட்சோழர். இச்சோழர் தந்தையர்
சுபதேவர். தாயார் கமலவதியார். கோச்செங்கட் சோழர் தாயின் கருவில் இருந்தபோது, “ இன்னும்
ஒரு நாழிகை கழிந்தபின் மகவு பிறக்குமாயின் பிறக்கும் குழந்தை மூன்றுலகையும் ஆட்சி புரியும் “ என்று
சோதிடர் கூற, அதன் பொருட்டுத் தாயைத் தலை கீழாக ஒரு நாழிகை கட்டியபின் குழந்தை பிறந்தது.
அதனால் குழந்தையின் கண் சிவந்தது. அக்காரணம் பற்றி அக்குழந்தை கோச்செங்கணான் என்ற பெயரையும்
பெற்றது. குழந்தை இளவரசு நிலை பெற்றபின் அரசமுடி சூட்டப் பட்டது.
கோச்செங்கட்சோழர்
முன்னைய பிறப்பின் உணர்வால் இறைவனுக்குரிய கோவில்களைக் கட்டினார். பூசைக்குரிய ஏற்பாடுகளைச்
செய்தார். சிதம்பரம் சென்று நடராசப்
|