களும
களும் “ எம் இதயத்து
மேவவைத்து ஏத்தெடுப்பாம் “ என்றனர்.
சேக்கிழாரைப்
போன்ற அடியார் பக்தியில் சிறந்த ஒருவரைக் காண இயலாது. காட்டவும் முடியாது. அங்ஙனம்
இருக்க, அவர் சடையனார்க்கும், இசைஞானியார்க்கும் வணக்கமோ வாழ்த்தோ பாடிலர். திருத்தொண்டத்
தொகையில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு நாயனார்க்கும் வணக்கமும் போற்றுதலும் பாடிய இவர், இவ்விருவர்கட்கும்
அங்ஙனம் செய்யாததேன்? செய்யாமைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. இவ்விருவர்களும் அடியார்
வரிசையில் வைத்தற்கு உரியர் அல்லர். அடியார்களின் வைப்பு முறையில் வைக்கப்படுவாராயின்,
அவர்கட்கும் அடியேன் என்று சுந்தரர் பாடி இருப்பர். அவ்வாறு அடியேன் என்று நம்பி ஆரூரர் கூறாமல்,
“ சடையன் இசைஞானி காதலன் “ என்று தான் கூறினார். ஆகவே, இவ்விருவர்களை வன்தொண்டரின்
பெற்றோர்களாகக் கருதினர் சேக்கிழார் என்பது நன்கு தெரிகிறது, ஈண்டு அருண்மொழித்தேவர் இவ்விருவர்கட்கு
வணக்கம், வாழ்த்து, போற்றி பாடி இருப்பின், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் பெற்றோர்கட்கும்
அவ்வாறு போற்றுதல், வாழ்த்துதல், வணங்குதல் செய்திருக்க வேண்டும். ஆண்டும் இவர் செய்திலர்.
ஈண்டும் இவர் செய்திலர் என்பதை அறிதல் வேண்டும்.
திரு பிள்ளையவர்கள்
தமது நூலின் பாட்டுடைத் தலைவர் சேக்கிழார் ஆதலின், அச் சேக்கிழாரைச் சுந்தரர் சுட்டியுள்ளவர்கள்
காக்க வேண்டும் என்ற முறையில் காப்புப் பருவத்தை அமைத்துக்கொண்டார். எனவே, அம்முறையில்
மன்னிய என்று தொடங்கும் செய்யுளில் எழுவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருத்தலின் அவ்வெழுவரையும்
சேர்த்து “ எழுவோரும் எம் இதயத்து ஏத்தெடுப்பாம் “ என்றனர்.
திரு பிள்ளையவர்களின்
உள்ளக் குறிப்பு நாயன்மார்கள் அனைவரும் சேக்கிழாராம் குழந்தையைக் காக்க
|