New Page 1
வேண்டும் என்பது. ஆனால்,
அவர் பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழில் நம்பி ஆரூரராம் சுந்தரர் சேக்கிழாரைக் காக்கவேண்டும்
என்ற குறிப்புக் காணப்பட்டிலது. என்றாலும், திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பட்ட நாயன்மார்கள்
சேக்கிழாரைக் காக்கவேண்டும் என்று உளங்கொண்டு பாடியபோது, சுந்தரர்தம் திருத்தொண்டத் தொகையில்
உள்ள ஒவ்வொரு பாட்டின் முதற்குறிப்பையே தலைப்பாக வைத்துக் காப்புப் பருவத்தைப் பாடி முடித்துள்ளார்.
அம்முதற் குறிப்புப் பாடல்களின் முதல் பத்துப் பாடல்களின் ஈற்றிலும் “ ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே “
என்றும், பதினோராவது பாட்டின் இறுதியில் “ ஆரூரன் அடிமை “ என்றும் இருத்தலின், சுந்தரரும்
அடியவர் என்ற பேற்றிற்கு உரியவர் ஆகின்றார். ஆகவே, சுந்தரரும் சேக்கிழாரைக் காக்கவேண்டும்
என்ற குறிப்பு உள்ளதை உற்று நோக்குதல் வேண்டும். இதனால் சுந்தரரது வரலாற்றின் சுருக்கத்தையும்
ஒரு சிறிது அறிதல் இன்றியமையாததாகும்.
சுந்தரமூர்த்திகள் : இவர்
நடுநாட்டில் திருமுனைப்பாடியில் திருநாவலூரில் ஆதிசைவ பிராம்மண மரபில் சடையனார், இசைஞானியார்
இருவருக்கும் திருமகனாராகப் பிறந்தார். இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர் என்பது.
இவரை நரசிங்க முனையரையர் வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டனர். நம்பி ஆரூரர் மணப்பருவம்
உற்றார். உறவினர் பெற்றோர்கள் இவர்க்குப் புத்தூர்ச் சடங்கவி சிவாசாரியார் திருமகளாரை
மணம் முடிக்க ஏற்பாடு செய்துவிட்டனர்.
நம்பிஆரூரர்
முற்பிறவியில் கைலையில் இறைவர்க்குத் திருத்தொண்டு புரிந்துவந்தவர். அங்குத் தேவியார்க்குப்
பூத்தொண்டு செய்துவந்த அனிந்ததை, கமலினி இருவரையும் காதலித்தனர். அக்காதலை நிறைவேற்றிக்கொள்ள
இறைவர் இவரைப் பூமியில் பிறக்கும்மாறு செய்துவிட்டனர். அது போது சுந்தரர் இறைவரைத் தம்மை
மண்ணுலக
|