பக்கம் எண் :

New Page 1

206

             காப்புப் பருவம்

மையலில் மூழ்காதபடி தடுத்தாட் கொள்ள வேண்டினர்.  அவ்வேண்டுகோட் கிணங்கிய இறைவர், நம்பியாரூரர் திருமணத்தின்போது வந்து திருமணம் முடித்துக்கொள்ளாதபடி தடைசெய்து விட்டனர்.  பின் நம்பிஆரூரர் இறைவன் உறைவிடங்களுக்குச் சென்று திருவாரூரை அடைந்தனர்.  அங்குக் கமலினியார் பரவையார் என்ற பெயருடன் பிறந்து மணப்பருவம் உற்றிருந்தனர்.  அவரைத் திருவாரூர் தியாகேசன் திருவருளால் மணந்தனர்.  பின் திருவொற்றியூரை அடைந்து, அங்கு வந்து பிறந்த அனிந்திதையாகிய சங்கிலியாரையும் இறைவர் திருவருளால் திருமணம் செய்து கொண்டனர்.  இம்முறையில் இவர் வாழ்ந்து சேரமான் பெருமாள் நாயனார் நட்புப் பெற்று, இறைவர் தந்த வெள்ளையானையின்மீது திருக்கையிலைக்குச் சென்றனர். “                

(11)