| 
2
 
2. செங்கீரைப் 
பருவம் 
1.   ஒண்கொண்ட பொதுவகத் 
துலகெலாம் உய்யநா 
       றுலகெலாம் என்றதீஞ்சொல் 
   உவந்தே டெழுத்தாணி 
கொண்டெழு திரண்டுகை 
       அம்புவி யுறப்பதித்து 
   வண்கொண்ட 
ஒருதாள் மடித்தூன்றி ஒருதாள் 
       வயங்குற எடுத்தூன்றிஒண் 
   வாய்கவிச் 
சுவைஒழுக் கறிவிப்ப தெனஅமுத 
       மாட்சிமை 
ஒழுக்கெடுப்ப 
   வெண்கொண்ட நெற்றிநீ 
றிளநிலவும் ஒண்கா 
       திருங்குழை 
இளங்கதிரும்விட் 
   டெறிப்பஇள 
முறுவலும் தோன்றமலர் திருமுகம் 
       எடுத்துவான் 
அளவுநொச்சித் 
   திண்கொண்ட 
குன்றையம் பதியருள் மொழித்தேவ 
       செங்கீரை 
யாடியருளே 
   திருத்தொண்ட நன்னாட்டு 
வேளாளர் குலதிலக 
       செங்கீரை 
யாடியருளே 
     (அ, சொ)
ஒண்கொண்ட பொதுவகத்து-ஒளியைத் தன்னிடத்தே கொண்ட பொற்சபையிடத்து, ஒண்மை-பொலிவு, 
பொதுவகம்-பொற்சபை, உய்ய-பிழைக்க, ஈடேற, நாறு-மணக்கும்,  உலகெலாம் ஏன்ற தீஞ்சொல்-இறைவனால் 
எடுத்துக் கூறப்பட்ட உலகெலாம் என்னும் இனியமொழி, தீஞ்சொல்-இனியமொழி, உவந்து-மகிழ்ந்து, 
அம்புவி-அழகிய பூமியில், வண்கொண்ட-வளமை கொண்ட, வயங்குற-விளக்கம் பொருந்த அமுதம்-(ஈண்டு) 
குழந்தையின் கடைவாயிலிருந்து ஒழுகும் எச்சில்.  எண்-மதிப்பு, நீறு-திருநீறு, 
இருங்குழை-பெருமைமிக்ககாதணி, கதிர்-ஒளி 
 |