இ
இருகைமல ரும்புவி பதித்தொரு முழந்தாள்
இருத்தியொரு தாள்மேல்நிமிர்த்து
இந்திரதிரு
விற்கிடை தொடுத்தவெண் தரளநிரை
ஏயப்பநுதல் வேர்பொடிப்பத்
திருமுகம்
நிமிர்ந்தொரு குழந்தையமு தாம்பிகை
செங்கீரை ஆடியருளே
என்ற
அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழையும் காட்டுவார். இப்பிள்ளைத் தமிழிலும்,
உவந்தஏடு எழுத்தாணி கொண்டெழு திரண்டுகை
அம்புவி யுறப்பதித்து
வண்கொண்ட ஒரு தாள் மடித்தூன்றி ஒருதாள்
வயங்குற எடுத்தூன்றி
திருமுகம் எடுத்து ***
செங்கீரை ஆடி அருளே
என்று
கூறப்பட்டிருப்பதையும் காணலாம். செங்கீரை ஆடுவதைக் கிளி சாய்ந்தாடுவது போல ஆடுதல் என்றும்
கூறுவர், அதுபோது செங்கீரை என்பது அழகிய கிளி என்று பொருள் படும்.
மெய்ஞ்ஞான ஒளிக்கும், பொன் ஒளிக்கும் சிதம்பரப் பொற்சபை காரணமாதலின் “ஒண்கொண்ட
பொருவகம் “ எனப்பட்டது. மேலும், விசயாலயன் ஆதித்தன், பராந்தகன் முதலிய சோழ மன்னர்கள்
தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டையும், திருச்சிற்றம்பலத்தையும் பொன்வேய்ந்தனர் ஆதலின்,
“ஒண் கொண்டபொது “ எனப்பட்டது எனினும் ஆம். தில்லைக்கூத்தப் பெருமானார் உலகம் உய்ய உவந்தாடும்
இடம் கனகசபை. அது பொது என்றும் கூறப்படும். பொதுவாவது எவர்க்கும் உரிமை உடையது என்பதாம்.
இப்பொதுவும் சிறப்பாகச் சைவப் பெருமக்களும், பொதுவாக எல்லாச் சமயத்தவரும் வணங்கும் சபையாதலின்
பொது எனப் பெயர் பெற்றது. தாயுமானார் இஃது எவர்க்கும்பொது ஆதலை, “பகர்வரிய தில்லை மன்றுள்
பார்த்த போது அங்கு என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே
|