New Page 1
சேக்கிழார்
எப்போதும் துதிக்கும் கையுடையவர். தொண்டை நாட்டுக் கோட்டங்கள் இருபத்து நான்கு. அவற்றுள்
ஒன்று புலியூர்க் கோட்டம். இக்கோட்டத்திற்குத் தலைநகரம் புலியூர். இது கோடம்பாக்கம்
பழனியாண்டவர் கோவிலுக்கு அண்மையில் உள்ளது. அதனைச் சுற்றியுள்ள ஊர்கள் கோவூர், குன்றத்தூர்,
பூவிருந்த வல்லி. இவை நான்கும் கொண்டதே புலியூர்க் கோட்டம். இக் கோட்டத்தைச் சார்ந்தவர்
சேக்கிழார். இதனால் இவரை ஓர் கோட்டத்தானாகி என்றனர். சேக்கிழாரைக் குறிக்கும் தொடர்கள்
விநாயகரைக் குறிக்கும்போது, துதிக்கை என்பது விநாயகரது தும்பிக்கையினையும், ஓர் கோட்டத்தான்
என்பது தன் கையில் ஒற்றைக் கொம்மை ஏந்தியவன் என்பதனையும் குறிக்கும்படி அமைந்திருத்தலின்,
சேக்கிழார் விநாயகரை ஒப்பாவர் என்று குறித்துள்ளனர்.
அருள்மொழித்தேவர்
என்ற பெயருடைய நம் புலவர் பெருந்தகையார், சேக்கிழார் என்றே பெரிதும் செப்பப்படுபவர். கரிகால்
சோழன் தொண்டை நாட்டில் நாற்பத்தெண்ணாயிரம் குடிகளைக் குடிபுகச் செய்தான் என்பது தெரிகிறது.
அக் குடிகளுள் சிறந்தவர்கள் கூடல்கிழான் புரிசைக்கிழான், வெண்குளப்பாக்கிழான், சேக்கிழான்
என்பவர்கள் தலை சிறந்த குடிகள் ஆவார். இவர்களுள் சேச்கிழார் குடியில் சிறந்து விளங்கியவர்,
அருள்மொழித்தேவர். அக்குடி சிறக்கும்படி திகழ்ந்தமையின், இவர் சேக்கிழார் என்றே சிறப்புடன்
அழைக்கப் படுவார் ஆயினர். இந்த உண்மைகளைத் திருத் தொண்டபுராண வரலாற்று நூல்,
பாலாறு வளஞ்சுரந்து
நல்க மல்கும்
பாளைவிரி மணங்கமழ்பூஞ் சோலை தோறும்
காலாறு கோலிஇசை
பாட நீடும்
களிமயில்நின்
றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறு கோட்டத்துப்
புலியூர்க் கோட்டம்
நன்றிபுனை
குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயல்
குன்றத்தூரில்
சேக்கிழார்
திருமரபு சிறந்த தன்றே
|