பக்கம் எண் :

என

210

             செங்கீரைப் பருவம்

என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர் ‘  என்று தெளிவு படுத்தியுள்ளனர்.

    ஈண்டு  ‘ உலகெலாம்  ‘ என்பது மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கப்பால் உள்ள உலகங்களையும், இராமலிங்க அடிகளார் எடுத்துக் கூறியுள்ள உலகங்களையும் உணர்த்தும் தொடராகும்.  உலகெலாம் என்று இறைவர் எடுத்துக்கொடுத்த தொடர், பெரிய புராணத்தில் சிறப்பாக முதல் இடை, கடையாகிய மூவிடங்களிலும், பொதுவாகப் பல இடங்களிலும், கம்பர் ராமாயணத்தில் முதல் பாடலிலும், திரு முருகாற்றுப் படையின் தொடக்கத்திலும் மணந்து கொண்டிருத்தலின்  “ நாறும் “ என்றனர்.  இதனை இறைவன் அன்பு கூர்ந்து இனிதாக எடுத்து மொழிந்தமையின், இது தீஞ்சொல் ஆயிற்று.  திருநீறு வெண்மையாகவே இருத்தல் வேண்டும் என்பது சைவசமயமரபு.  இதுகுறித்தே திரு முறைகள்,  “ செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர். சுண்ண வெண்ணீறு, சாந்தம் வெண்ணீறெனப் பூசி, வெள்ளை நீறணியும், பால் வெண்ணீறு, வெண்ணீறாடி, திருவெண்ணீறு அணியாத திருவில் ஊர், அருநோல்கள் கெட வெண்ணீறு அணியார், மறுவிலாத வெண்ணீறு பூசுதல் “  என்று எடுத்து இயம்பியுள்ளன.  அது குறித்தே ஈண்டும்  “ வெண்கொண்ட நெற்றிநீறு “ என்றனர்.  சேக்கிழார் பெருமானார் திருநீற்றினை ஒளியுடைப் பொருளாக எண்ணி  “ அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்றொளி “  என்றனர் ஆதலின், இங்கு நீறு இளநிலவு என்றனர்.  இப்பாடலில் சேக்கிழார் குழந்தைப் பருவத்துப் பொலிவு செம்மையுறக் காட்டப்பட்டிருப்பதைக் கண்டு இன்புறுக.

    ஒரு நாட்டிற்குரிய உறுப்புக்களில் மதிலும் ஒன்று.  இதனை வள்ளுவர்.

    உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கன்
    அமைவரண் என்றுரைக்கும் அரண்
    கொளற்கரிதாய் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்குஎளிதாம் நீரது அரண்