New Page 1
சொற்கள்-அசரீரியாக
எழுந்த உலகெலாம் எனும் சொற்கள், அல்லது பொருள் நிரம்பிய நிறைமொழியாகிய பயன் நிறைந்த
சொற்கள் எனினும் ஆம், விருப்பம்-விருப்பத்தால், மழவு-இளைய குழந்தைப்பருவம், “ மழவும்
குழவும் இளமைப் பொருள “ என்பது தொல்காப்பியம் புகல்-கூறும், குழலை-குழந்தைகள் பேசும் திருந்தாத
மொழிகள், மருவு-கலந்த, உறாது-அடையாது, வள்ளால்-வள்ளலே, (சேக்கிழார்) வள்ளன்மை உடையோர்,
சான்று-சாட்சி, ஒருவரிய தாம்-நீக்க முடியாததாம், செப்பலுற்றபொருள் என்ற முதலையுடைய பெரிய
புராணச் செய்யுள், எவன்-ஏன் இது வினாவினைக் குறிப்பு வினைமுற்று, மழவா உவப்பதும்-குழந்தையாகக்
கொண்டு மகிழ்வதும், திருவம்-செல்வம்.
விளக்கம் :
“தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே“ என்பது ஒளவையார் வாக்கு. மேலும், தொண்டர்கள்
சிறந்த முனிவர்களாலும் வாழ்த்தத்தகுந்த பெருமை சான்றவர்கள். இதற்குச் சான்றாக உபமன்யு முனிவர்
சுந்தரரை வணங்கியதனால் அறியலாம். உபமன்யு முனிவர் சுந்தரரை வணங்கியதனால் அறியலாம்.
உபமன்யு முனிவர் தம் திருவாயால் “நம்பி ஆரூரன் நாம் தொழும்தன்மையான்“ என்று கூறியதனால்
உணரலாம்.
பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால்
எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊமமேல்
ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால்
இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரைநீ
அடைவாய்
என்று நம்பி ஆரூரருக்கு
அடியவர்களின் பெருமையினை இறைவனார் எடுத்து மொழிந்தனர் எனச் சேக்கிழார் பெருமானாரே எடுத்து
மொழிந்துள்ளனர். இதனை உட்கொண்டேதான் பொருவரிய தொண்டர்கள் என்று ஈண்டுச் சிறப்பிக்கப்பட்டனர்.
மேலும், சேக்கிழார் தமது
|