1
|
1. காப்புப் பருவம்
தில்லை வாழ் அந்தணர்
|
23 |
கார்கொண்ட சோலைசூழ்
ஆருரர் ஓர்அரைக்
கால்நம்பி
ஆரூரர்முக்
கால்அரைக் கால்ஆக
முடிவுசெய் தருள்மாக்
கவித்திசையின்
வீற்றிருக்கும்
ஏர்கொண்ட தில்லைமூ
ஆயிரர்முன் வழுவரும்
எழுவரும் தழுவரும்எம
திதயம் தழால்கொண்
டுறைந்திடச் செய்தவரை
எப்போதும் ஏத்தெடுப்பாம்
பார்கொண்ட தொண்டர்வர
லாறுசொல் புராணம்அம்
பலவர்அரு ளால்அமைந்த
படிதெரித் திடஉலகெ
லாம்எனும் சுருதிநாப்
பண்ணும்ஈற்
றும்பொருத்திப்
பேர்கொண்ட சைவபரி
பாடைஅறி வரியசம்
பிரதாயம் முதலியாவும்
பிறங்கத் தெரித்தெம்மை
ஆண்டகுன் றத்தூர்ப்
பிரானைப்
புரக்கஎன்றே
[அ-சொ]
பார்-பூமியில்,
அம்பலவர்-தில்லை நடராசர், சுருதி-வேதமொழி, நாப்பண்-நடு, ஈற்றும்-இறுதியிலும். பிறங்க -
விளங்க, புரக்க - காக்க, கார் - மேகம், ஆரூரர்- திருவாரூர்த் தியாகர், நம்பி ஆரூரர் -
சுந்தர மூர்த்தி சுவாமிகள், மா - சிறந்த, கவித்திசை - கவியில், திசை ஏழாம் வேற்றுமை
உருபு. பரிபாடை - குழூஉக் குறி போன்றது. (அதாவது ஒரு கூட்டத்தார்க்குள் ஒரு பொருளைக் குறிக்க
அமைத்துக்கொண்ட சொல்) சம்பிரதாயம் - தொன்று
|