| 
New Page 1
 
   
“ அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் 
      செந்தண்மை பூண்டொழுக லான் “  
என்று வள்ளுவப் பெருந்தகையார் 
கூறிய கூற்றுக்கு இயைய எடுத்துக்காட்டாக அமைந்தவர் உமாபதி சிவாசாரியார்  என்பது புலப்படுகிறது.  
மேலும் அவர், சிவப்பிரகாசம் முதலான சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் பலவற்றையும் கோயில் 
புராணம், சேக்கிழார் புராணம், ஆதியாய நூல்கள் பலவற்றையும் அருளிச் செய்த மெய்ஞ்ஞானப் பேரறிஞர் 
ஆவர்.  இவர் மெய்ஞ்ஞான அற்புத உமாபதியாவார் என்பதற்கேற்பத் தாம் மெய்ஞ்ஞானவிடயங்களையே 
புகல வல்லவர் என்பதை அவர் வாக்கான, 
புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப் 
    புகல்அளவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதம் 
பிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமும்சொல்  
                                    
பொருள்போல் 
    பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன 
அறத்திறனால் விளைவதாய் உடலுயிர்க்கண் அருக்கன் 
    அறிவொளிபோல் பிரிவரும்அத் துவித மாகும் 
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ 
    சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்க லுற்றாம் 
என்ற பாடலாலும் காணலாம். 
    
திருக்கைலாய பரம்பரையாவது இன்னது என்பதைச் சிறிது சிந்திப்போம்.  கைலைப் பெருமானது அருள் 
ஞானப் பெருக்குக் குருசந்தானம் ஆகும்.  ஆகவே, இது கயிலாயத்தினின்றும் தோன்றியது என்பதை உணர்தல் 
வேண்டும்.  இச் சந்தான வழியாக இரு சந்தானங்கள் கிளைத்தன.  ஒன்று அகச்சந்தானம், மற்றொன்று 
புறச் சந்தானம்.  அகச் சந்தான ஆசிரியர்கள் திருநந்தி தேவர், சனற் குமார முனிவர், சத்தியஞா 
னதரிசினிகள், பரஞ்சோதி முனிவர் என்பவர்கள்.  இந்த நான்கு ஆசாரியப் பெருமக்களைத் தேவசந்தானத்தார் 
என்பர். 
    
இதன்பின் ஸ்ரீ மெய்கண்ட தேவரை முதல்வராகக் கொண்டு புறச் சந்தானம் தழைக்கலாயிற்று.  இச்சந்தான 
 |