வ
விளக்கம் : கங்கை பல கால்களாகப் பரவி ஓடுதலின் ஆயிரமுகக் கங்கை எனப்பட்டது. கங்கை ஆயிரமுகமாகத் தோன்றுகிறாள்
என்பதை ஆளுடைய அரசர்,
“ கயல்பாயக் கடுங்கலுழிக்
கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு
வானில் தோன்றும் “
என்றும்,
மையறு மனத்த னாய
பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த
ஆயிரம் முகம தாகி
வையகம் நெளியப்
பாய்வான் வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார்
சாய்க்காடு மேவி னாரே.
என்றும் பாடியருளியதைக்
காண்க.
சூரியன் பல கிரணங்களைப்
பெற்றமையின் “ கதிர்கள் பொலியும் ஆயிரம் உள்ளவன் “ எனப்பட்டான். “ ஆயிரம் ஞாயிறு
போலும் ஆயிரம் நீள் முடியானும் “ என்பது தேவாரம். இறைவன் வேதங்கிடந்து தடுமாறு வஞ்சவெளி
யாதலின், “ ஆயிரம் மறைக்கும் எட்டாச் சென்னி பொற்ப ஆயிரம் உடையகோன் “ எனப்பட்டான்.
“ எதிர்மறை எட்டும்
தோறும் வஞ்சனாய் அகல்வான் “ என்னும் பரஞ்சோதியார் வாக்கையும் உணர்க. இறைவன் திருவுருவமும்
பல்லாயிரத் தோற்றத்துடன் பொலிவிட வல்லது ஆதலாலும், ‘ சென்னி பொற்ப ஆயிரம் உடையகோன்
எனப்பட்டான். இதனைத் திருஞானசம்பந்தர் வாக்காகிய,
நொடியோர்
ஆயிரம் உடையார்
நுண்ணிய
ராம்அவர் நோக்கும்
வடிவ மாயிரம்
உடையார்
வண்ணமும்
ஆயிரம் உடையார்
முடியும் ஆயிர
ம்உடையார்
மொய்குழ லாளையும் உமையாள்
வடிவும் ஆயிரம்
உடையார்
வாழ்கொளி புத்தூ ருறைவாரே.
|