பக்கம் எண் :

இவ

242

             செங்கீரைப் பருவம்

    இவ்வாறு அஃறிணையின் ஆண் உயிர் இனங்கள் மயங்கித் தம்மினப்பேடு என்று கருதிக் கொள்வதைத் திரு ஈங்கோய்மலை எழுபது என்னும் நூலில்,

    பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
    படிமுகிலைப் பல்காலும் பார்த்திட்டு-இடரா
    இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
    குருவருட்குன் றாய்நின்றான் குன்று

எனப் பாடப்பட்டுள்ளதைக் காண்க.

    பெரிய புராணத்துள் கூறப்பட்டவர் வரலாறுகள் நம்பி ஆண்டார் நம்பிகள் கருத்துப்படியும், சைவ சமயத்தவர்களின் தொன்று தொட்டு அறிந்து வந்த கருத்துப்படியும், (பொய்யடிமை இல்லாத புலவர் தொகை அடியர் அல்லர் ;  தனி அடியார்களுள் ஒருவரே ஆவர் என்ற கருத்து ஆராய்ச்சி உலகில் நிலவி வருவதாலும், அடியேன் எழுதியுள்ள நூலாகிய பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்னும் நூல்வழி பொய்யடிமை இல்லாத புலவர் தொகை அடியார் அல்லர்.  தனியடியாரே.  அத்தனி அடியாரும் மாணிக்கவாசகரே என்றும் எழுதி இருப்பதால் இங்ஙனம் குறிப்பிட்டனன்) ஒன்பது தொகை அடியாரும், அறுபத்து மூன்று தனி அடியாரும் ஆக எழுபத்திரண்டு அடியவர்கள் வரலாறு என்பது வெளிப்படையாக இருந்தாலும், சேக்கிழார் பெருமானார் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார் யாவர் என்பதைக் குறிப்பிடுகையில்,

    மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக் கப்பால்
        முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
    நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
        நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
    பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
        புதியமதி நதிஇதழி பொருந்த வைத்த
    சேவேந்து வெல்கொடியார் அடிச்சார்ந் தாரும்
        செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே