பக்கம் எண் :

வஞ

 

       செங்கீரைப் பருவம்

245

    வஞ்சநம வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
    அஞ்சே உனை அடைந்தேன் ஐயா பராபரமே

என்றார் தவராச சிங்கமாம் தாயுமானாரும்.  மணிமொழி யாரும் தம்மைப்பற்றிக் கூறும்போது, “ யானே தும்பிறப்பஞ்சேன் இறப்பதனக்கு என் கடவேன் “ என்றும்,

        ஆமாறுன் திருவடிக்கே
            அகம்குழையேன் அன்புருகேன்
        பூமாலை புனைந்தேத்தேன்
            புகழ்ந்துரையேன் புத்தேளிர்
        கோமான்நின் திருக்கோயில்
            தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
        சாமாறே விரைகின்றேன்
            சதுராலே சார்வானே

என்று கூறினார்.  இத்திருவாசகப் பாடல் கருத்தே ஈண்டுத்  “ தோம் பல உடையேம் என்பது முதல் துதியேன் “  என்ற வரைப் பாடப்பட்டுள்ளது.  கோவிலைத் தூவுதலும், மெழுகுதலும் செய்யவேண்டும் என்பதுதான் நமது சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் சரியை மார்க்கமாகும்.  ஆளுடைய அரசும் தம் நெஞ்சை நோக்கி,

    நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
        நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
    புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
        பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
        சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடைஏம் ஆதி என்றும்
        ஆருரா என்றென்றே அலரா நில்லே

என்று கூறியருளினார்.

    அலகிட்டு மெழுக்கும் இட்டு என்ற தொடரைக் கவனிக்க.

    அவ்வச் சமயத்தவர், அவர் அவர் தெய்வங்களையே வழிபடுதல் வேண்டும்.  இதில் தவறுதல் கூடாது.  தவறினால்