அவர
அவர்கட்கு இம்மையிலும்
அம்மையிலும் தண்டனை விதித்தல் முறையே ஆகும். இதனைத் திருமூலர் நன்கு தெளிவு படுத்தியுள்ளார்.
தத்தம் சமயத் தகுதியில்நில்
லாதாரை
அத்தன் சிவன்சொன்ன
ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும்
அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதவ்
வேந்தன் கடனே
என்பதைக் காண்க.
ஆகவே, அவர் அவர் வழிபடு கடவுளை வணங்கி அவர் அவர் சமய ஒழுகலாற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அதனால்தான் “ நாம் பல தேவரை நண்ணேம் வியவேமால் “ என்றனர். இதற்கு மேற்கோளாக,
கொள்ளேன்
புரந்தரன் மாலயன்
வாழ்வு
குடிகெடினும்
நள்ளேன் நினதடி
யாரொடல்
லால்நர
கம்புகினும்
எள்ளேன் திருவரு
ளாலே
இருக்கப்
பெறின்இறைவா
உள்ளேன்
பிறதெய்வம் உன்னைஅல்
லால்எங்கள்
உத்தமனே
என்ற திருவாசகப் பாடலை
எடுத்துக்காட்டலாம். இறைவனை நம் வசப்படுத்தற்கு எளிய முறை நீராலும் மலராலும் வழி படுதலே
ஆகும். இதனையே, “ ஆராலும் அளவிடற்கரியவுனை ஒருகரத்து நீராலும், மலராலும், நெஞ்சுருகப் பணலாமே “
என்றார் சைவ எல்லப்ப நாவலர். இதனால் யமபாதையிலிருந்தும் விலகலாம். இதனை அப்பர்,
கற்றுக் கொள்வன
வாயுள நாவுள
இட்டுக் கொள்வன
பூவுள நீருள
காற்றைச் செஞ்சடை
யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம
னால்முனி வுண்பதே
என்றனர்.
இறைவன் திருமுன் நின்று
மெய்ம்மயிர் பொடிப்ப இரு கைகளையும் சிர மேற்குவித்து வணங்குதல் முறை. அச்செய்
|