பக்கம் எண் :

New Page 1

 

       செங்கீரைப் பருவம்

247

கைகளை உளத்தில்கொண்டே  “ நாள்மலர்கொடு நின் அடி ஏத்தி நயத்தலை மேற்கொண்டு கூம்பல் செய்கையேம் “  என்று இவ்வாறு கூறப்பட்டது

        மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன்
            விரையார் கழற்கென்
        கைதான் தலைவைத்துக் கண்ணீர்
            ததும்பி வெதும்பியுள்ளம்
        பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
            சயசய போற்றி என்னும்
        கைதான் நெகிழ விடேன்உடை
            யாய்என்னைக் கண்டுகொள்ளே

என்ற மணிமொழியார் மணிவாக்கையும் காண்க.

    நாம் இறைவற்கு உகந்த செயல்களைச் செய்தால் அதற்காகக் கூலிகேட்கும் உரிமை நமக்கு உண்டு.  அப்பர் பெருமானார் தாம் மேற்கொண்ட செயற்கு இறைவனை நோக்கிக் கூலி கேட்கிறார்.  அதனை,

        கருவாய் கிடந்துன் கழலே நினையும்
            கருத்துடையேன்
        உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன்
            உனதருளால்
        திருவாய் பொலியச் சிவாய நமஎன்று
            நீறணிந்தேன்
        தருவாய் சிவகதி நீபா திரிப்புலி
            யூர்அரனே

என்ற திருப்பாடலில் காண்க.  இக்கருத்தை ஒட்டி அன்றோ ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் கோமான் நீ அருளும் கூலி எவன் கொல்? என்று வினவுகின்றார்.  விரும்பியது கிடைத்தால் எவர்க்கும் மகிழ்ச்சிதானே !  அதனையே ஈண்டு  ‘ அவாயது நல்கில் குலாவும் உவப்புறுவோம் “ என்றார்.  சேக்கிழார் உத்தமச் சோழப்பல்லவர் என்ற பட்டம் பெற்று