மன
மன்னன்போல் விளங்கினமையின்
கோமான் எனப்பட்டார்.
ஒவ்வொரு மரபினர்க்கு
ஒவ்வொரு மலர் அடையாள மலராக அமைவது தமிழரது மரபாக உள்ளது. பார்ப்பனர்களுக்குத் தாமரை மலர்
அடையாள மலராகும். இதனைச் சுந்தரரே நன்கு குறிப்பிட்டுள்ளார். ‘ அல்லியம் தாமரைத் தார்
ஆரூரன் ‘ என்பது சுந்தரர் வாக்கு. “மறையவர்தம் குரிசில் வயல் நாவலாரூரன் என்று
சுந்தரர் தம்மை அந்தணர் என்றதையும் காண்க. பெரியாழ்வார் தம்மைத் “ திருவில்பொலி
மறைவாணன் பட்டார் பிரான் “ என்று கூறிக் கொள்கிறார். இவரது மாலையைப்பற்றி ஸ்ரீ ஆண்டாள்
அம்மையார் கூறும்போது, “அணிபுதுவைப் பைங்கமலத்தார் தெரியல் பட்டர்பிரான்“ என்று
பாடியுள்ளார். திருவிளையாடலில் “தேமன் முல்லைத் தீந்தார்ச் சிறுதகை வணிகற்காக “
என்ற இடத்து வணிகர்க்கு முல்லைமலர் உரித்தாதலைக் காண்க. இம்முறைக்கு இணங்க ஈண்டு வேளாளர்
குலத்திலகராம் சேக்கிழார் பெருமானார்க்கு உரிய ஆம்பல்மலர் உரித்து என்பதை “ஆம்பல்
அவாவுதல் மேயபுயாசல“ என்று கூறினர். முன்பும் இவ்வாறே கூறப்பட்டது.
அரசர் ஆவார் முடியுடை
வேந்தர்களாகிய சேர பாண்டிய சோழர்களே ஆவர். அவர்கட்குரிய மலர்கள் முறையே பனம்பூ, வேம்பு
மலர், ஆத்திப் பூ ஆகும். இதனை ஒல்காப் பெருமையுடைய தொல்காப்பியம்,
வேந்திடை தெரிதல்
வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே
ஆர்என வரூஉம்
மாபெருந் தானையர்
மலைந்த பூவும்
என்றனர். ஆகவே, அவ்வம்
மரபினர்கட்கும் மலர் அடையாளமாக இருத்தலை உணர்க.
வேளாளர்களுக்குத் தொழில்
உழுதுண்டு வாழ்தலாகும். இதனைத் தொல்காப்பியர்.
|